hello madras mobile banner 1200x300

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

சென்னை 23, அக்டோபர் 2026: அதிகாரம், பாரம் பரியம், பழிவாங்குதல் ஆகியவற்றை மைய மாகக் கொண்ட பிரம் ம £ ண் ட ம £ ன கேங்ஸ்டர் கதையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இருவரும் நேருக்கு நேர் மோதும் காட்சிகளைக் கொண்ட ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை நெட் ஃபிளிக்ஸ் வெளியிட் டுள்ளது. யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், தர்மராஜ் ஷெட்டி இந்தத் தொடரை எழுதி இயக்கியுள்ளார். பெண்கள் மட்டுமே அதிகாரம் செலுத்தும், தங்களது ஆட்சியைப் பாதுகாக்கப் போராடும் கேங்க்ஸ்டர் உலகத்தை நம் கண்முன் கொண்டு வர இருக்கும் ‘அக்கா’ தொடர் வரும் அக்டோபர் 30ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.

பெர்னூரு என்ற கற்பனையான அரசாட்சியையும் அங்கு அதிகாரம் செலுத்தும் குடும்பங் களையும் டிரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. இங்கு பெண்களே முன்னின்று தலைமை தாங்குவதுடன், தங்க ளு க்குச் சொந்தமான அதிகாரத்தையும் உரிமைகளையும் தீவிர மாகப் பாதுகாக்கின் றனர். ஆனால், தலை முறை தலைமுறையாக இந்த அரசாட்சியை நிலைநிறுத்தி வந்த வலிமைக்கும் கட்டுப் பாட்டுக்கும் பின்னால் பல்வேறு மோதல்கள் உருவாகிக் கொண்டிருக் கின்றன. நீண்ட கால மாகப் பெர்னூருவை ஆட்சி செய்து வரும் பாரம்பரியத்துக்கு வெளியிலிருந்து ஒருவர் சவால் விடுக்கும்போது, விசுவாசங்கள் சோதிக் கப்படுகின்றன, பகைமை தீவிரமடை கிறது, பழைய காயங் கள் மீண்டும் வெளிப் படுகின்றன. இதனால் அந்த அரசாட்சியின் சமநிலை கேள்விக் குள்ளாகிறது.

‘அக்கா’ தொடரின் முதன்மை கதாபாத் திரங்களான பவானி மற்றும் ருத்ராவாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே நடித் துள்ளனர். இவர்களின் வெவ்வேறு லட்சியங் களும் கொள்கைகளும் தீவிரமான மோதலுக்கு வழிவகுக்கின்றன. இவர்களுக்கிடையே யான மோதல் ஏற்கென வே நிலவி வரும் அதிகார அமைப்பையே சீர்குலைக்கும் அச்சுறுத் தலை ஏற்படுத்துகிறது. அதிகாரம், விசுவாசம், குடும்பம், பழிவாங்கு தல் ஆகியவற்றை இந்தத் தொடர் பேசுகிறது. கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே ஆகியோருடன் தன்வி ஆஸ்மி, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அன்ஷ§மன் புஷ்கர், மோனிகா பன்வார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங் களில் நடித்துள்ளனர்.

நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவின் தொடர் பிரிவுத் தலைவர் தன்யா பாமி பகிர்ந்து கொண்டதாவது, “நல்ல கதைகளையும் பார்வை யாளர்கள் மனதில் நீங்காத இடம்பிடிக்கும் கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்துவதில் நெட்ஃபிளிக்ஸ் எப்போதும் ஆர்வமாக உள்ளது. ’அக்கா’ தொடரின் மூலம் பார்வையாளர்கள் பெர்னூரு என்ற கற்பனை உலகத்துக்குள் நுழைவார்கள். அங்கு பெண்கள் வெறுமனே கதையின் ஒரு பகுதி யாக மட்டுமில்லாமல், அதிகார மையங்களாக இருக்கிறார்கள். ராதிகா ஆப்தே, தன்வி ஆஸ்மி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை நுணுக்கமாக புரிந்து கொண்டு அசாதாரண மான நடிப்பை கொடுத் திருக்கிறார்கள்.

ஆதித்யா சோப்ரா வின் கற்பனையில் உருவான ‘அக்கா’, யஷ் ராஜ் என்டர்டெயின் மென்ட் நிறுவனத்துட னான எங்களது தொடர்ச்சியான கூ ட் ட ணி யி ன் மற்றொரு முக்கியப் படைப்பாகும். ª ப ர் னூ ரு வி ன் மோதல்கள், சவால்கள், பல்வேறு அடுக்கு களைக் கொண்ட கதைக்களம் மற்றும் அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பெண் களின் கதைகளைப் பார்வையாளர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »