சென்னை 18, அக்டோபர் 2026: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி யாகி உள்ளது என பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் இன்று கூறியதாவது: தமிழகம் மு ழுவதும் மின்வெட்டு பிரச்னை உள்ளது. குறிப்பாக சென்னையில் அதிக மாக உள்ளது. வெளிச் சந்தையில் 1 யூனிட் மின்சாரம் ரூ.35 வாங் கினால் மக்கள் தான் அதிகம் பாதிக்கப் படுவர். அதிமுக எம்எல் ஏக்களிடம் நடக்கும் குதிரை பேரம் குறித்து சட்டமன்றத்தில் பேசி யுள்ளேன். ஜெம் வீர மணி வழக்கு விவகாரம் அதிர்ச்சி அளிக்கிறது. விலைவாசி உயர்வால் ஏழை மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக் கப்பட்டு வருகின்றனர். ஒரு கிலோ அரிசி ரூ.100 வரை சென் றுள்ளது.
விலைவாசி உயர் வை அரசு கட்டுப் படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி யாகி உள்ளது. பட்டப் பகலில் பாலியல் வன் கொடுமை, கொலைகள் நடக்கின்றன. முதல்வர் வசம் உள்ள காவல் துறையின் செயல்பாடு குறித்து சட்டசபையில் பேசியும் பதில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
