சென்னை 23, அக்டோபர் 2026: தூய்மைப் பணிக்கான சிறப்பு இயக்கம் 6-ன் கீழ் புதுதில்லியில் உள்ள பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் ஞானதீபம் என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்ட இந்தி நூலகத்தை பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் திறந்து வைத்தார்.
இந்தி புத்தகங்கள், இலக்கியங்களை படிப் பதை ஊக்குவிப்பதை யும், அலுவலகப் பணி களில் இந்தியை பயன் படுத்துவதை ஊக்கு விப்பதையும், அலுவல் மொழிக்கொள்கையை சிறப்பாக அமல்படுத்து வதன் மூலம் இந்தியில் பணியாற்றும் கலாச் சாரத்தை வலுப்படுத்து வதையும் இது நோக்க மாகக் கொண்டுள்ளது.
இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக தெற்கு கட்டடத்தில் சுமார் 35,000 சதுர அடி பரப்பளவிலான இடம் தூய்மைப்படுத்தப் பட்டது. பழைய ஆவணங்கள் அகற்ற பட்டது. 1,361 மின் கோப்புகளும், 1,746 நேரடி கோப்புகளும் நீக்கப்பட்டன.
