hello madras mobile banner 1200x300

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் பணியில் சேர்ந்த 5 நாளில் டிஸ்மிஸ்

சென்னை 18, அக்டோபர் 2026: வெள்ளை மாளிகையின் புதிய செய்தித் தொடர் பாளராகப் பொறுப் பேற்ற கேட்டி ஜக்கரியா, பணியில் சேர்ந்த ஐந்தே நாட் களில் டிஸ்மிஸ் செய் யப்பட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை யின் முந்தைய செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டுக்குப் பதிலாக, கேட்டி ஜக்கரி யாவை புதிய செய்தித் தொடர்பாளராக அதிபர் டிரம்ப் கடந்த அக்டோபர் 9ம் தேதி நியமித்தார்.

பதவியேற்ற பின்னர் தனது முதல் அதிகாரப் பூ ர்வ செய்தியாளர் சந்திப்பை நடத்திய ஜக்கரியா, செய்தியா ளர்களின் கேள்விகளை எதிர்கொள்வதில் கடுமையான தடுமாற் றத்தை வெளிப்படுத் தினார். குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் கேள்வி களுக்கு மட்டுமே பதிலளித்த அவர், சுமார் 14 நிமிடங்களிலேயே செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியேறினார். மேலும், உரிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் தன்னை வழக்கறிஞர் எனக் கூறிக்கொண்ட தாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழ, கடுமையான விமர்சனங் களை எதிர்கொண்டார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப் கூறியதாவது:

ஊடகங்களில் ஜக்கரியா மீது கடுமையான விமர்சனங் கள் முன் வைக்கப்படு கின்றன. இத்தகைய விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண் டிய அவசியமில்லை என்று கருதுகிறேன். நிம்மதியாக இருப்பதே சிறந்தது. இந்த விமர் சனங்கள் அவருக்கு தேவையா என அவரி டம் நான் பேசினேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read the full e-paper

One thought on “வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் பணியில் சேர்ந்த 5 நாளில் டிஸ்மிஸ்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »