சென்னை, 18 அக்டோபர் 2026: மத்திய அரசுடன் இணைந்து செயல்படு வதால், ஆந்திராவில் செயல்படுத்தப்பட்டு வரும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பி லான திட்டங்கள் குறித்து, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதல்வர் விஜயிடம் எடுத்துக் கூறியதாக தெரிய வந்துள்ளது.
பிரதமர் மோடி, கடந்த வாரம் சென்னை வந்து, 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான தி ட் ட ங் க ¬ ள தொடங்கி வைத்தார். விழாவில், முதல்வர் விஜயும் பங்கேற்றார். இருவரும் சென்னை விமான நிலையத்தில் தனியாக, 30 நிமிடங்கள் பேசியுள்ளனர். அப்போது, மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட் டால் ஏற்படும் வளர்ச்சி யை, ஆந்திராவுக்கு சென்று பார்க்கும்படி, விஜயிடம் தெரிவித் துள்ளார்.
அதன் காரணமாக வே, அவர் ஆந்திரா சென்று, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசியதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, அரசு வட்டாரங்கள் கூறிய தாவது:
தமிழகத்தில், கடந்த திமுக அரசானது, மத்திய அரசுடன் தொடர்ந்து விரோத போக்கை கடை பிடித்தது. இதனால், கல்வி, நகர்ப்புற உள்கட்டமைப்பு, இரண்டாம் கட்டட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள், நெடுஞ்சாலை உள் ளிட்ட புதிய திட்டங் களை செயல்படுத்த, மத்திய அரசு நிதியுதவி பெற முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், 'தமிழகத் திற்கு நிதி ஒதுக்காமல், மத்திய அரசு வஞ்சிக் கிறது' என, கடந்த ஆட்சியாளர்கள் குற்றம் சாட்டினர். இதனால், தமிழகத்தில் பல துறை களின் செயலர்களாக இருந்த, மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளால் டில்லி சென்று, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், செயலர் களை தொடர்ந்து சந்தித்து, அதிக நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங் களை பெற முடிய வில்லை.
தமிழகத்தில், முதல்வர் விஜய் தலை மையிலான தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்று இருந்தாலும், மத்திய அரசு மீது அவசியமில்லாமல் குற்றம் சாட்டுவ தில்லை.
சென்னையில் பிரதமர் மோடியை சந்தித்த நிலையில், முதல்வர் விஜய் கடந்த வாரம் ஆந்திர மாநிலம் விஜயவாடா சென்றார். அங்குள்ள கனகதுர்க்கை அம்மன் கோவில் தரிசனம் செய்த விஜய், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டிற்கு சென்றார்.
இச்சந்திப்பு, ஒன்றரை மணி நேரம் நடந்தது. அப்போது, கோதாவரி – கிருஷ்ணா – காவிரி நீர் இணைப்பு திட்டம் பேசப்பட்டது. ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு முறைப் படி நீரை திறப்பது தொடர்பாக, விஜய் வலியுறுத்தினார்.
பின், மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதால், ஆந்திராவில், மத்திய அரசின் நிதி மற்றும் ஆதரவுடன் செயல் படுத்தப்படும் திட்டங் களை, சந்திரபாபு பட்டியலிட்டுள்ளார். அமராவதியில், 58,000 கோடி ரூபாய் உள்கட் டமைப்பு திட்டங்கள்; கோதாவரி நீர்பாசன திட்டத்தை உள்ளடக் கிய போலாவரம் தேசிய நீர்ப்பாசன திட்டம்; 10,134 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரயில் பாதைகள், இரட்டை பாதைகள், 74 ரயில் நிலைய திட்டங்கள், குப்பம் உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்பட உள்ள புதிய விமான நிலை யங்கள் போன்றவற்றை, முதல்வர் விஜயிடம், சந்திரபாபு நாயுடு விரிவாக தெரிவித் துள்ளார்.
இதேபோல, தமிழக அரசும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால், பல திட்டங்கள் உங்கள் மாநிலத்திற்கு கிடைக் கும் என்றும் ஆலோ சனை வழங்கியதாக தெரிகிறது. எனவே, தமிழகத்தில் ஒவ்வொரு துறைக்கும் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி, புதிய திட்டங்களை பெறு வதற்கான தயாரிப்பு பணிகளில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அரசு வட்டாரங்கள் கூறின.
