hello madras mobile banner 1200x300

இந்தியாவில் முக்கிய துறைகள் 7.9% வளர்ச்சி: ஒன்றிய அரசு தகவல்

சென்னை 23, அக்டோபர் 2026: இந்தியாவில் செப்டம் பர் மாதத்தில் முக்கிய துறைகளின் வளர்ச்சி 7.9 சதவீதம் அதிகரித் துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித் துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச் சகம் நேற்று வெளி யிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில்:

“இந்தியாவின் முக்கிய உள்கட் டமைப்பு துறைகளான இரும்புத்தாது, மின்சாரம் மற்றும் சிமெண்ட் ஆகிய துறைகளின் வலுவான செயல்பாட்டால், முக்கிய உள்கட் டமைப்பு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி நடப்பு செப்டம்பர் (செப்டம்பர் 2026) ம £தத்தில் 7.9 சதவீதம் கணிசமாக உயர்ந் துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதம் (ஆகஸ்ட் 2026) 5.9 சதவீதமாக இருந்தது. அதேசமயம், முந்தைய ஆண்டின் இதே மாதத் தில் 3.1 சதவீதமாக இருந்தது. பல்வேறு துறைகளில் இரும்புத் தாது உற்பத்தி 18.4 சதவீதம், மின்சாரம் 11.4 சதவீதம், நிலக்கரி 10.7 சதவீதம், சுத்திகரிப்பு நிலைய தயாரிப்புகள் 10.3 சதவீதம் அதிகரித் துள்ளன. கடந்த ஆண்டின் இதேகாலக் கட்டத்துடன் ஒப்பிடும் போது, செப்டம்பர் மாதத்தில் சிமெண்ட் உற்பத்தி 9.8 சதவீதமும், எஃக்கு உற்பத்தி 4.9 சதவீதமும் உயர்ந் துள்ளன” என தெரிவித் துள்ளது.

சில முக்கிய துறை கள் சரிவை கண்டுள்ள தாகவும் அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட் டுள்ளது. அதன்படி, ”உரங்கள் (-11.7%), இயற்கை எரிவாயு(- 4.6%), மற்றும் கச்சா எண்ணெய்(-1.4%) ஆகிய துறைகள் செப்டம்பர் 2026ல் எதிர்மறையான வளர்ச்சியை கண்டுள் ளன” என தெரிவிக்கப் பட்டுள்ளது. “ஏப்ரல் முதல் செப்டம்பர் 2026 வரையிலான காலத்தில், முக்கிய துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 5.1 சதவீதமாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதேகாலக் கட்டத்தில் 2.5 சதவீதமாக இருந்தது” என ஒன்றிய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கூறி உள்ளது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »