hello madras mobile banner 1200x300

அனைத்து காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவின நிதி ஆண்டுக்கு ரூ.71 கோடியாக உயர்வு: முதல்வர் விஜய் உத்தரவு

சென்னை 23, அக்டோபர் 2026: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாடு அரசு, சட்டம் மற்றும் ஒழுங்கை சிறப்பாக பராமரித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை அமைத்து, பொது அமைதியை நிலை நிறுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண் டுள்ளது. காவல்துறை யின் நிர்வாகம் மற்றும் செயலாக்க பணிகள் அதிகரித்து வரும் சூழலில், அதற்கான செலவினமும் கணிச மாக அதிகரித்துள்ளது. இதனை கருத்திற் கொண்டு, மாநிலத்தில் உள்ள காவல் நிலை யங்களில் அன்றாடம் ஏற்படும் முறையான செலவுகளை எதிர் கொள்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்த வேண்டியது அவசிய மாகிறது. இவ்வாறு எதிர்பாரா செலவு நிதியை உயர்த்தி வழங்குவதன் மூலம், காவல் நிலையங்களுக் கான நிர்வாக மற்றும் செயலாக்க செலவினங் களை மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களை களைவதுடன், இந்த செலவினங்களுக்காக அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களை சார்ந் திருப்பது குறைவதோடு, ஊழலை தடுக்கவும், ஒழிக்கவும் வழிவகை செய்யும்.

இந்நிலையில், லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்க வேண்டு மென்ற முதல்வர் விஜய்யின் சீரிய நோக்கத்தின் அடிப் படையில், காவல்துறை யில் நிர்வாகம் மற்றும் செயலாக்கத்திற்கு அன்றாடம் ஏற்படும் முறையான செலவு களை எதிர்கொள் வதற்காக தமிழ்நாட் டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக் கும் எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்தி வழங்கப்படும் என்று 2026-27ம் ஆண்டிற் கான காவல்துறை மானியக் கோரிகையின் போது முதல்வர் விஜய் அறிவித்தார்.

இந்நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் அந்தந்த காவல் நிலையத்தின் குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கேற்ப மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட் டுள்ளன. அதனடிப் படையில், காவல் நிலை யங்களின் அன்றாட செலவினங்களுக்காக ஏற்கெனவே மாதந் தோறும் வழங்கப் பட்டுவரும் எதிர்பாராச் செலவு நிதி முறையே, 3,750 ரூபாயில் இருந்து ரூ.30,000 ஆகவும், 6,000 ரூபாயில் இருந்து 40,000 ஆகவும், 8,250 ரூபாயில் இருந்து 50,000 ஆகவும் உயர்த்தி வழங்கப் படுகிறது. இதற்கென, ஆண்டுதோறும் ஆகும் செலவினத்திற்கு ரூ.71 கோடியே 1 லட்சத்து 54 ஆயிரம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »