சென்னை 23, அக்டோபர் 2026: பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், போலந்து பிரத மர் திரு டொனால்ட் டஸ்க், 2026 அக்டோ பர் 21 முதல் 23 வரை அரசுமுறைப் பயண மாக இந்தியா வந்துள் ளார். முன்னணி நிறுவ னங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், தொழில்துறைப் பிரதி நிதிகள் அடங்கிய உயர்நிலைக் குழுவும் அவருடன் இந்தியா வந்துள்ளது.
இரு தலைவர்களும் மண்டல மற்றும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து, விரிவாக விவாதித்தனர். கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் பிரதமர் திரு நரேந்திர மோடி, போலந்து நாட்டில் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ப யண த்தை இரு தலைவர்களும் நினைவு கூர்ந்தனர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு கள் 'உத்திசார் ஒத் துழைப்பு' நிலைக்கு உயர்ந்ததுடன், 2024- 2028-ம் ஆண்டுகளுக் கான செயல் திட்டமும் ஏற்றுக்கொள்ளப் பட்டது. 2026 செப்டம் பரில், வார்சாவில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக் டர் எஸ் ஜெய்சங்கர், போலந்து துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான திரு ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி ஆகியோர் இந்தச் செயல் திட்டம் குறித்து மேற்கொண்ட மறுஆய்வு முடிவுகளை, இரு நாட்டுப் பிரதமர் களும் அங்கீகரித்தனர்.
போலந்து பிரதமரின் இந்தியப் பயணம், 'உத்திசார் ஒத்துழைப் பிற்கு' புதிய உத்வேகத் தை அளித்துள்ளதாக இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். இரு நாடுகளுக்கும் இடை யேயான ஒத்துழைப்பை உறுதியான, கால வரை யறைக்கு உட்பட்ட, பரஸ்பரம் பயனளிக்கக் கூடிய வகையில் மாற்று வதற்கான தங்களின் விருப்பத்தை அவர்கள் மீண்டும் உறுதி செய்தனர்.
உயர்நிலையிலான அரசியல் பரிமாற்றங் களையும், நிறுவன ரீதி யான பேச்சுவார்த்தை களையும் விரைவு படுத் துவது என இரு தலை வர்களும் ஒப்புக் கொண்டனர். மேலும், இரு நாடுகளின் நாடாளு மன்றங்கள், மாநில, பிராந்திய அதிகார அமைப்புகள், சிந்தனைக் குழுக்கள், கொள்கை சார்ந்த நிறுவனங்களுக்கு இடையேயான நெருங் கிய செயல்பாடுகளை யும் அவர்கள் ஊக்கு வித்தனர்.
தங்களுக்கு அளிக்கப் பட்ட அன்பான வர வேற்பிற்காக, போலந்து பி ர த ம ர் தி ரு டொனால்ட் டஸ்க், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். இந்தியா-போலந்து நாடுகளுக் கிடையேயான உத்தி சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வும், பன்முகப்படுத்த வும், அதிகாரிகள் நிலை யிலான பேச்சுவார்த்தை கள், வலுவான நிறுவன ஒத்துழைப்பு மூலம் செயல் திட்டத்தை (2024-2028) திறம்படச் செயல்படுத்தவும் இரு தலைவர்களும் தங்களது உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்தனர்.
