hello madras mobile banner 1200x300

நம்பிக்கையின் ஒளிவிளக்காக செயல்படும் இந்தியா; மோடியின் உலகளாவிய பங்களிப்பை பாராட்டிய போலந்து பிரதமர்

சென்னை 23, அக்டோபர் 2026: போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் அரசுமுறை பயண மாக இந்தியா வந்துள் ளார். பிரதமர் மோடியா சந்தித்த அவர், உயர்மட்ட இருதரப்பு பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு கூட்டாகச் செய்தியாளர் சந்திப் பில் உரையாற்றினர். அப்போது பேசிய டொனால்ட் டஸ்க், போலந்து தனது லட்சியங்களை பொருளாதார வளர்ச்சியின் அடிப் படையில் அமைத் துள்ளது; எனவே, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா மட்டுமின்றி, ஒட்டு மொத்த ஐரோப்பா விலும் போலந்து முக்கியப் பங்காற்ற முடியும் என்றார்.

அதே போல பாகிஸ் தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், போலந்து ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்து அந் நாட்டு பிரதமர் டொனால்ட் டஸ்க் பெருமிதம் தெரிவித் தார். நெருக்கடியான காலங்களில் ட்ரோன் கள், சாட்டிலைட் துறையில் இந்தியா – போலந்து நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு பெரும் உதவியாக இருந்ததாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், இருநாடுகளுக்கு இடையிலான கலாச் சார ஒத்துழைப்பைப் பற்றி குறிப்பிட்டார். இது இரு நாடுகளுக் கிடையிலான ஒத் துழைப்பின் மிக முக்கியமான அம்சம் என்றும் கலாச்சாரம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்புறவு ஆகியவை மிகவும் உறுதியான அடித்தளத் தை வழங்கும் என்பதை தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார். இவற்றின் மீதுதான் நமது இரு நாடுகளுக்கு இடையிலான பொரு ளாதார மேம்பாட் டையும் ஒத்துழைப் பையும் நாம் மேலும் கட்டியெழுப்ப முடியும் என்றார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக மார்ச் 30-ஆம் தேதியை 'போலந்து-இந்திய கூட்டாண்மை தினமாக' அறிவிப்பதற் கான உடன்பாட்டை நாங்கள் எட்டியுள் ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரி வித்து கொள்வதாகவும் பேசினார்.

மோடியை போன்ற ஒருவர் இந்தியா போன்ற ஒரு சக்தி வாய்ந்த நாட்டை வழி நடத்துவது சர்வதேச அளவில் அனைவருக் கும் ஒரு நம்பிக்கையின் ஒளிவிளக்கு போன்றது என்று டஸ்க் கூறினார். உலகளாவிய அரசியல் நிச்சயமற்ற தன்மை ணூளுக்கு மத்தியில் இந்தியாவின் தலைமை உலகிற்கு நம்பிக்கையை அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »