hello madras mobile banner 1200x300

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்

சென்னை, 23 அக்டோபர் 2026: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் மாநில அவசரகால செயல் பாட்டு மையத்தில் வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மேற்கொண்டுவரும் வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டார்,

முதலமைச்சர் விஜய் அவர்கள் நேற்று (22.10.2026) சென்னை, எழிலகத்திலுள்ள வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை யின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத் திற்கு வருகைதந்து, தற்போதைய வட கிழக்குப் பருவமழை யை எதிர்கொள்வதற் காக சென்னையைத் தவிர இதர மாவட் டங்களில் மேற்கொள் ளப்பட்டுள்ள முன்னெச் சரிக்கை மற்றும் ஒருங் கி ணைப்பு நடவடிக் கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கை கள் குறித்து மாநில அவசரகால செயல் பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்

மாவட்டங்களின் மாவட்ட இந்த ஆய்வின்போது, இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ள ஆட்சியர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துரை யாடி, மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட் டுள்ள முன்னெச்சரிக் கை நடவடிக்கைகளின் நிலை குறித்து ஆய்வு செய்தார். கனமழை மற்றும் வெள்ளப்பெருக் கின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படாத வகையில், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறும் சம்பந்தப் பட்ட மாவட்ட ஆட்சி யர்களுக்கு அறிவுறுத் தினார்.

* மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ள மாவட் டங்கள்

இந்திய வானிலை ஆய்வு மையத்தால் இன்று (22.10.2026) நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியா குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

எல் நினோ தொடர் பான முன்னறி விப்பு களைக் கருத்திற் கொண்டு, வடகிழக்குப் தேவையான முன்னெச் சரிக்கை நடவடிக்கை களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பருவமழையை எதிர் கொள்வதற்குத் அவர் கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

மாவட்ட அளவி லான பேரிடர் மேலாண்மை அலுவலர் களான மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக அவ்வப் போது ஆய்வுக் கூட்டங் கள் நடத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »