சென்னை 23, அக்டோபர் 2026: இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும், முந்தைய ஒப்பந்தங்களில் இருந்து இது முற்றிலும் மாறு பட்டதாக இருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள் ளார். வெள்ளை மாளி கையில் செய்தியாளர் களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: இந்தி யாவும் அமெரிக்காவும் வ ர்த்த க ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக நெருக்கமாக உள்ளன.
இந்தியா ஒப்பந் தத்தை விரும்புகிறது; இரு நாடுகளும் விரை வில் உடன்பாட்டை எட்டும். இந்த ஒப்பந்தம் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தாக இருக்கும். இவ்வாறு டிரம்ப் தெரி வித்தார். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள நிலை யில், டிரம்ப் இந்தக் கருத்தைத் தெரிவித் துள்ளார்.
முன்னதாக, வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீருடன் பேச்சுவார்த்தை நடத் தினார். இரு நாடுகளும் கடந்த பிப்ரவரியில் வர்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்டத்துக்கான கட்டமைப்பை இறுதி செய்தன. அமெரிக்கா வின் வரி விதிப்பு மாற்றங்களைத் தொடர் ந்து பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.
