hello madras mobile banner 1200x300

ஐநா அவையில் சரி பார்க்கப்படாத குற்றச்சாட்டுகளை வைத்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை தவறாக சித்தரிக்க முயற்சி: இந்தியா கடும் கண்டனம்

சென்னை 23, அக்டோபர் 2026: டெல்லியில் போராட் டம் நடத்திய இளைஞர் கள் மீது டெல்லி காவல் துறை கடுமையான அடக்குமுறைகளை கையாண்டதை கண்டித்து ஐநா மனித உரிமை நிபுணர்கள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இது தொடர்பாக ஐநா பொதுசபையின் 3வது குழுவில், ஒன்றிய வெளியுறவு அமைச்சக துணை செயலாளர் பர்கா தம்ரகர் சமர்ப் பித்த அறிக்கையில், “இந்தியா சர்வதேச ம னித உரிமை அமைப்புகளுடன் இணைந்து செயல் படுகிறது.

ஆனால், இத்தகைய செயல்பாடானது பேச்சு வார்த்தை, ஆலோ சனை, ஒத்துழைப்பு, பாரபட்சமற்ற அணுகு முறை மற்றும் வெளிப் படைத்தன்மை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். மனித உரிமைகள் என்பது அரசியல் ரீதியான அழுத்தம் கொடுப்பதற்கோ அல்லது குறிப்பிட்ட சில நாடுகளை குறி வைப்பதற்கோ ஒரு கருவியாக பயன்படுத் தப்பட கூடாது.

அறிக்கையில் உள்ள தகவல்களை சரியாக குறிப்பிடுமாறு அனைத்து தரப்பினரை யும் கேட்டு கொள் கிறோம். மனிதாபி மானம் சார்ந்த ஒரு தகவலை, ஒரு தீர்ப்பாக வோ அல்லது முடிவாக வோ மிகைப்படுத்தி காட்ட வேண்டாம். குறிப்பிட்ட மற்றும் முறையான ஆவணங் களுடன் கூடிய புகார் கள் குறித்து, ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழிமுறைகளின்படி விளக்கம் அளிக்க இந்தியா எப்போதும் தயாராகவே உள்ளது.

அதேசமயம், சரி பார்க்கப்படாத குற்றச் சாட்டுகள், முழுமை யற்ற புள்ளி விவரங்கள் அல்லது இந்தியாவை பற்றி எந்தவொரு குறிப்பும் இடம்பெறாத ஒரு அறிக்கையை வைத்து உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை பற்றி எதிர்மறையான, தவறான பிம்பத்தை உருவாக்க மேற்கொள் ளப்படும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா கடுமையாக எதிர்க் கிறது” என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »