hello madras mobile banner 1200x300

சென்னையில் நடைபெற்ற வைப்ரண்ட் குஜராத் குளோபல் சம்மிட் 2027 ரோட்ஷோ, தொழில்துறை ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது

சென்னை 23, அக்டோபர் 2026: சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடை பெற்ற ‘வைப்ரண்ட் குஜராத் குளோபல் சம்மிட்’ (விஜிஜிஎஸ்) 2027-க்கான சாலைக் கண்காட்சியில், குஜராத்தின் சிறப்பான தொழில்முறை பலங்கள் முன்னிலைப்படுத்தப்ப ட்டன. இதில் தொழில் துறைத் தலைவர்களும் அரசுப் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து, முதலீடு கள், தொழில்நுட்பக் கூட்டணிகள் மற்றும் உற்பத்தித் துறை ஒத் துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ரோடுஷோ விற்கு முன்னதாக, குஜராத் அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் மனிஷா வகில், குஜராத் அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் நகர்ப்புற வீட்டுவசதித் துறை முதன்மைச் செயலாளர் திரு. எம். தென்னரசன், ம ற்றும் குஜராத் மாநில மின்னணுவியல் இயக்கத்தின் (ஜிஎஸ்இ எம்) மிஷன் இயக்குனர் திருமதி நேஹா குமாரி ஆகியோர் பங்கேற் றனர். குஜராத்தைச் சேர்ந்த பிற முக்கிய பங்குதாரர்கள், சென்னையில் உள்ள 21 முன்னணி வணிக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதி நிதிகளுடன் ஆலோ சனைக் கூட்டங்களை நடத்தினர்; இதில் ரேனே (மெட்ராஸ்) லிமிடெட், ஃபுசோ கிளாஸ் இந்தியா பிரைவேட் லிவீடெட், ஃப்ளோசில்-பிஇடி கோட்டிங்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், அசோக் லேலண்ட் லிவீடெட், போன் ப்யூர் கெமிக்கல் இந்தியா பிரைவேட் லிமிடெட், செயிண்ட்-கோபேன், ஜிஹெச் இன்டக்ஷன் இந்தியா, கேவின் கேர்ஜே.கே. ஃபென்னர் இந்தியா லிமிடெட், ஈ.ஐ.டி. பாரி லிமிடெட்., கே.எல்.ஏ, ஆர்பிட்எய்ட் ஏரோ ஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட், சல்காம்ப் மேனுஃபேக்சரிங் இந்தியா, ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக், அக்னிகுல் காஸ்மோஸ், டெகினோ, காஸ்மிக் இணக்கத்தன்மை சோதனை ஆய்வகம், ஜிஆர்டி ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ், கோன் எலிவேட்டர் இந்தியா, டான்ஃபோஸ் மற்றும் ராஜ்ஹான்ஸ் இம் பெக்ஸ். குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையே தொழில்துறை ஒத் துழைப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங் கள் மற்றும் சாத்திய மான கூட்டாண்மை பற்றிய முன்னோக்கு களை பரிமாறிக் கொள்ள இந்த தொடர் புகள் வாய்ப்பளித்தன.

இந்த சாலைக் கண்காட்சியில், நகர்ப்புற மேம்பாடு மற்றும் நகர்ப்புற வீட்டுவசதித் துறையின் முதன்மைச் செயலாளர் திரு. எம். தென்னரசன் ஐஏஎஸ் அவர்கள், ‘விஜிஜிஎஸ் 2027’ குறித்த விளக்கக்காட்சி யை வழங்கினார். மேலும், குஜராத்தின் குறைக்கடத்தி சூழல் அமைப்பை எடுத் துரைக்கும் சிறப்புத் திரையிடலும் நடை பெற்றது.

தொழில் துறைப் பிரதிநிதிகள் தங்கள் அனுபவங் களைப் பகிர்ந்து கொண்ட துடன், மாநிலத்தில் உள்ள வணிக வாய்ப்பு கள் மற்றும் தொழில் வளர்ச்சி குறித்த ந ¬ ட மு ¬ ற ச் பார்வைகளையும் முன்வைத்தனர்.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »