சென்னை 18, அக்டோபர் 2026: இரவு நேரத்திலும் பூமியில் குறிப்பிட்ட இடங்களில் சூரிய ஒளியைப் பாய்ச்சும் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த அமெரிக்காவின் ரி ஃ ப் ª ள க் ட் ஆர்பிட்டல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற் காக, சூரிய ஒளியைப் பிரதிபலிக் கும் கண்ணாடிகளைக் கொண்ட செயற்கைக் கோள்களை விண் வெளியில் நிலை நிறுத்த உள்ளது. செயற்கைக்கோள் மூலம் எப்படி ஒளி கிடைக்கும்? பூமியின் இரவுப் பகுதியில் நேரடியாகச் சூரிய ஒளி படாது. ஆனால், விண்வெளியில் கண் ணாடி பொருத்திய செயற்கைக்கோளை நிலைநிறுத்தி, சூரிய ஒளியைப் பூமியில் குறிப்பிட்ட இடத் துக்குத் திருப்ப முடியும் என்பதே இ த்திட்டத்தின் அடிப்படை.
செயற்கைக்கோளின் நிலை, கண்ணாடியின் கோணம் ஆகியவற் றைக் கட்டுப்படுத்தி, தேவையான இடத்தில் ஒளியைப் பாய்ச்சத் திட்டமிடப்பட்டுள் ளது. சுமார் ஐந்து கி.மீ. அகலமுள்ள பகுதிக்கு ஒளி அளிக்கவும், அதன் பிரகாசத்தைக் கூட்டிக் குறைக்கவும், தேவை முடிந்ததும் நிறுத்தவும் முடியும் என நிறுவனம் கூறுகிறது. எனினும், இந்தத் தொழில்நுட்பம் இன்னும் வளர்ச்சிக் கட்டத்தில் உள்ளது. பேரிடர் மீட்புப் பணி களுக்குப் பயன்படும்: இரவு நேரத்தில் பேரிடர் பாதித்த பகுதி களில் மீட்புப் பணி களை மேற்கொள்ளவும், தொலைதூரத் தொழிற் சாலைகள் மற்றும் முக்கியக் கட்டமைப்பு களுக்கு வெளிச்சம் அளிக்கவும் இத் தொழில்நுட்பம் உதவும் என எதிர்பார்க்கப் படுகிறது.
சூரிய மின்நிலையங் களில் மின் உற்பத்தியை நீட்டிப்பதும் இதன் நோக்கங்களில் ஒன்று. ஆனால், இதன் ரூடை முறைச் சாத்தியமும் செலவுப் பயனும் இன்னும் நிரூபிக்கப்பட வில்லை. இத்திட்டத் துக்காக இந்தியாவின் ஸ்கைரூட் நிறுவனத்தின் விக்ரம்-1 ராக்கெட் மூலம் முதல் செயற் கைக்கோளையும், மேம் படுத்தப்பட்ட விக்ரம்- 1யு ராக்கெட் மூலம் இரண்டாவது செயற் கைக்கோளையும் ஏவ ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. சுற்றுச் சூழல் அமைப்புகள் எதிர்ப்பு
1993-ஆம் ஆண்டு ரஷிய விஞ்ஞானிகள் ‘ஸ்னாம்யா’ திட்டத்தின் கீழ் விண்வெளியில் கண்ணாடியை நிலை நிறுத்தி சூரிய ஒளியைப் பூமிக்குத் திருப்பினர். நிதிப் பற்றாக்குறையால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. தற் போதைய திட்டத்துக்கு எதிராகச் சுற்றுச்சூழல் அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன. இரவில் பாய்ச்சப்படும் பிரகாசமான ஒளி வன விலங்குகளைப் பாதிக்க லாம்; வானியல் ஆய்வு களுக்கு இடையூறு ஏற்படுத்தலாம்; மனிதர் களின் உடல் நேரச் சுழற்சியையும் பாதிக்க லாம் என அவை எச்சரித்துள்ளன.
