சென்னை, 18 அக்டோபர் 2026: தேனிசை தென்றல் மறைவுவுக்கு தலைவர் கள் இரங்கல் தெரிவித் துள்ளனர்.
தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் வெளியிட் டுள்ள இரங்கல் குறிப் பில்; பிரபல இசை யமைப்பாளர் தேவா அவர்களின் மறைவுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது ஆழ்ந்த இரங் கலைத் தெரிவித்துள் ளார். தனது இனிமை யான இசையமைப் பாலும், மறக்க முடி யாத பாடல்களாலும் தமிழ் திரையிசை உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்ற தேவா அவர்களின் மறைவு, தமிழ் திரை யுலகிற்கும் இசை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்கள் அனை வருக்கும் ஆளுநர் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறார். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறை வனைப் பிரார்த்திக் கிறார்.
முதல்வர் விஜய் வெ ளி யிட் டுள்ள இரங் கல் செய்திக்குறிப்பில்; தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசை யமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப் படங்களுக்கு இசை யமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரை யிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக் கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும். இசை யமைப்பாளர் தேவா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தின ருக்கும், உறவினர்களுக் கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்க லையும், அனுதாபங் களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட் டுள்ள பதிவில்; தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள் ளானேன். பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகை மைப் பாடல்களைத் திரையிசையில் பெரிய அளவில் புகுத்தி, கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர். எளிமையான கிரா மத்துப் பின்னணியில் இருந்து சென்னைக்கு வந்து, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து எத்தனையோ பேருக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர். உச்ச நட்சத் திரங்கள் அனைவரது திரைப்படங்களுக்கும் இசையமைத்து, அவற் றின் வெற்றிக்கு உறு துணையாக இருந்தவர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட் டுள்ள பதிவில்; பிரபல இசையமைப்பாளர் அன்புச் சகோதரர் “தேனிசைத் தென்றல்” தேவா அவர்கள் உடல் நலக்குறைவால் கால மானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச் சியும் வேதனையும் அடைந்தேன். எளிய பின்னணியில் இருந்து வந்து, எளிய மக்களின் வாழ்வியலை தன் இசை யால் பிரதிபலித்தவர் தேவா அவர்கள். Mass, Melody, Devotion என அனைத்து வகையான பாடல்களிலும் தனி முத்திரை பதித்தவர். தேவா அவர்களின் “கானா” பாடல்களுக்கு துள்ளாத கால்கள் இல்லை என்று சொல் லும் அளவிற்கு அனை வரின் உள்ளங்களிலும் நிறைந்திருக்கிறது அவ ருடைய இசை என்று குறிப்பிட்டுள்ளார்.
