சென்னை 18, அக்டோபர் 2026: அலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மலர் விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப் படத்திலிருந்து, தந்தை – மகள் பாசத்தை அழகாகப் பேசும் பாடலான ‘ஜோ ஜோ மா’ வெளியாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி. இமான் இசை யமைத்துள்ள இப் பாடலை ஹரிசரண் பாடியுள்ளார். பாட லாசிரியர் மோகன் ராஜன் பாடல் வரி களை எழுதியுள்ளார்.
பெற்றோரின் அன்பையும், வார்த்தை களால் விவரிக்க முடியாத பந்தத்தையும் இசையின் மூலம் ª வளிப்படுத்தும் இப் பாடல், கேட்பவர் களின் மனதை நெகிழ செய்யும்.
தந்தை- மகள் பாசத்தை பேசும் ‘விஸ்வாசம்’ படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல், திரையில் இடம்பெற்ற ஒரு பாடலாக மட்டுமல் லாமல், மக்களின் வாழ்க்கையோடும் உணர்வுகளோடும் கலந்த ஒரு பாடலாக இன்றளவும் கொண் டாடப்படுகிறது.
அதேபோன்ற உணர்வுப்பூர்வமான பாடலாக ‘ஜோ ஜோ மா’ பாடலை டி. இமான் உருவாக்கி யுள்ளார். ஹரிசரணின் உணர்வுப்பூர்வமான குரலும் மோகன்ராஜ னின் வரிகளும் இப் பாடலுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இந்த பாடல் படம் மீதான எதிர்பார்ப் பையும் அதிகரித் துள்ளது.
சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, புஜிதா பொன்னாடா, ஜெயப் பிரகாஷ், முனிஷ்காந்த் மற்றும் ஆர்யன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்பிரமணி இப்படத் தைத் தயாரித்துள்ளனர். ஏ.கே. நாகராஜன் நிர்வாகத் தயாரிப்பாள ராகப் பணியாற்றி யுள்ளார்.
இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதி வாளர் ராஜா பட்டாச் சார்ஜி, படத்தொகுப் பாளர் ஆர். கலை வாணன் மற்றும் கலை இயக்குநர் முனி கிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
