சென்னை – 15 நவம்பர், 2026 இந்தியாவின் 57- வது சர்வதேச திரைப்பட விழாவை ( IFFI) முன்னிட்டு, இந்தியன் பனோரமா பிரிவில் 25 முழுநீளத் திரைப்படங்கள், 20 முழுநீளமல்லாத திரைப்படங்கள் (ஆவணப்படங்கள், குறும்படங்கள் உள்ளிட்டவை) என மொத்தம் 45 படங்கள் திரையிடப்பட உள்ளன.
ஆதித்யா தர் இயக்கிய இந்திப் படமான ‘துரந்தர்’ இந்திய பிரிவில் முதலாவது முழுநீளத் திரைப்படமாகவும், லீனா யாதவ் இயக்கிய லடாக்கி மொழிப் படமான ‘பிகம்மிங்’ இந்திய பிரிவில் முதலாவது முழுநீளமற்ற திரைப்படமாகவும் திரையிடப்படவுள்ளன.
25 முழுநீளத் திரைப்படங்கள்:
மொத்தம் 404 படங்கள் பரிசீலிக்கப்பட்டு 25 முழு நீளத் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 20 படங்கள் இந்தியன் பனோரமா பிரிவிலும், ஐந்து படங்கள் முதன்மை வணிகத் திரைப்படப் பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. தமிழில் கண்ணன் எஸ் இயக்கிய ‘ஸ்க்ரோல்’, சிவகுமார் முருகேசன் இயக்கிய ‘தாய் கிழவி’ ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளன.
வணிகத் திரைப்படப் பிரிவில் ரிஷப் ஷெட்டி இயக்கிய கன்னடப் படமான ‘காந்தாரா: எ லெஜண்ட் சாப்டர் 1’, ஆதித்யா தர் இயக்கிய ‘துரந்தர்’ உள்ளிட்ட ஐந்து படங்கள் இடம்பெற்றுள்ளன.
தேசிய விருது பெற்ற இயக்குநர் மதுர் பண்டார்கர் தலைமையிலான 12 பேர் கொண்ட குழு முழுநீளப் படங்களைத் தேர்வு செய்தது.
20 முழுநீளமற்ற திரைப்படங்கள்:
