hello madras mobile banner 1200x300

போதைப் பொருள்கள் தடுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் வட்டார அளவில் என்எஸ்எஸ் சார்பில் விளையாட்டுப் போட்டிகள்

சென்னை – 15 நவம்பர், 2026 போதைப் பொருள்கள் தடுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் வட்டார அளவில் என்எஸ்எஸ் சார்பில் விளையாட்டுப் போட்டிகள்.

போதைப் பழக்கமற்ற இளைஞர்கள் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் 100 வார கால இயக்கத்தின் 9- வது வாரத்தில், நாடு முழுவதும் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நாட்டு நலப் பணித் திட்டமான என்எஸ்எஸ் நடத்தியது. 130- க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற 992 நிகழ்ச்சிகளில், 87,481 மாணவ தன்னார்வலர்கள், உள்ளூர் இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ், மை பாரத் என்எஸ்எஸ் இயக்குநரகம் இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தது. ' வலுவான சமூகங்கள், ஆரோக்கியமான இளைஞர்கள் ' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகள் மூலம் விளையாட்டின் வழியாக ஒழுக்கம், குழு ஒத்துழைப்பு, போதையற்ற வாழ்க்கை ஆகியவை வலியுறுத்தப்பட்டன.

பிரதமர் நரேந்திர மோடி 2026 ஆகஸ்ட் 2- ஆம் தேதி தொடங்கி வைத்த இந்த இயக்கம், போதைப்பொருள், மதுபானம், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களிலிருந்து இளைஞர்களை விடுவித்து, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

10 மண்டல இயக்குநரகங்களுக்கு உட்பட்ட 130- க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஓட்டப்பந்தயம், மாரத்தான், கபடி, கோ-கோ, கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. கயிறு இழுத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் இடம்பெற்றன. லட்சத்தீவிலும் பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகளில் 42,190 பெண்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு போட்டியும் போதை ஒழிப்பு உறுதிமொழியுடன் தொடங்கியது. வீதி நாடகங்கள், விழிப்புணர்வுப் பேரணிகள், முழக்க வாசகங்கள் எழுதும் போட்டிகள் ஆகியவையும் நடத்தப்பட்டன.

Read the full e-paper

Translate »