hello madras mobile banner 1200x300

சினிமா விமர்சனம் – சிங்காரம் – யோகி பாபுவின் சிறப்பான நடிப்பில் சமூக நீதியையும் மனித மாண்பையும் போற்றும் அற்புதமான படைப்பு!

சென்னை 31, அக்டோபர் 2026: சமூகத்தில் ஒடுக்கப் பட்ட மக்களின் Õ£ழ்க் கை, உரிமைக்கான குரல், அரசியல் பங்கேற்பு, குடும்ப உணர்வுகள், நகைச் சுவை எனப் பல அம்சங் களை அழகாக இணைத்து ரசிகர் களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்குகிறது இயக்குநர் கே.வி. கதிர்வேலுவின் ‘சிங்காரம்’.

தமிழ் சினிமாவில் எளிய மனிதர்களின் வாழ்க்கையையும் அவர் கள் எதிர்கொள்ளும் சவால்களையும் மைய மாகக் கொண்டு உரு வாகும் திரைப்படங்கள் எப்போதும் தனித்துவ மான கவனத்தைப் பெறுகின்றன. அந்த வரிசையில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ முக்கியமான சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகி யுள்ளது. நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல், வரலாறு, கலாசாரம், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் புறக் கணிப்புகள் மற்றும் சம உரிமைக்கான அவர் களது எதிர்பார்ப்பு களைப் பேசும் கதைக் களம் இப்படத்திற்கு சிறப்புச் சேர்க்கிறது.

ந ரி க் கு ற வ ர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண மனிதன் தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனுப வங்களின் வழியாக, தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் வளர்த்துக்கொண்டு அரசியலில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பின ராக உயர்வதே படத்தின் மையக்கரு. சமூகத்தில் ஒவ்வொரு வருக்கும் சமமான மரியாதையும் வாய்ப் பும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனை யை இப்படம் முன் வைக்கிறது. பிறப்போ, பொருளாதார நிலை யோ ஒருவரின் கனவு களுக்கும் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் திரைக்கதை அமைந் துள்ளது. இப்படத்தின் முக்கியமான சிறப்பு, பொதுவெளியில் அதிகம் பேசப்படாத ஒரு சமூகத்தின் வரலாற் றையும் வாழ்வியல் அனுபவங்களையும் திரைப்படத்தின் மூலம் பரந்த அளவிலான மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சி யாகும்.

மொத்தத்தில், ‘சிங்காரம்’ என்பது நகைச்சுவை, குடும்ப உணர்வுகள், அரசியல் பின்னணி மற்றும் சமூகச் சிந்தனை ஆகிய வற்றை ஒருங்கிணைக் கும் அர்த்தமுள்ள திரைப்படமாக அமைந்துள்ளது. யோகி பாபுவின் மாறுபட்ட கதாபாத்திர நடிப்பு, வலுவான துணை நடிகர்கள், கே.வி. கதிர்வேலுவின் சமூக அக்கறைமிக்க இயக்கம், சாம் சி.எஸ். இசை எனப் பல சிறப்பு களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் படைப்பாக ‘சிங்காரம்’ திகழ்கிறது. மனித மாண்பு, சமத்துவம், துணிச்சல் மற்றும் சாதிக்க வேண்டும் என்ற கனவு ஆகியவற்றை முன்னிறுத்தும் இப் படம் தமிழ் சினிமா வில் ஒரு குறிப்பிடத் தக்க முயற்சியாகும்.

நடிகர்கள்:

யோகி பாபு, வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், மரியா வின்சென்ட், சார்ம்ஸ், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, சென்ட்ராயன், டி.எஸ்.ஆர்., தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம். கணேஷ்கர் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

தயாரிப்பு நிறுவனம்: ராக் புரொடக்ஷன்ஸ், தயாரிப்பாளர்கள்: ஏ.எஸ். ரமண பாலாஜி, பத்மாவதி காந்தி, எழுத்து மற்றும் இயக்கம்: கே.வி. கதிர்வேலு, இசை: சாம் சி.எஸ்., பாடல்கள்: விவேகா, ஒளிப்பதிவு: பிரசன்னா எஸ். குÑ£ர், படத்தொகுப்பு: லாரன்ஸ் கிஷோர், கலை இயக்கம்: குருராஜ், சண்டைப் பயிற்சி: ஃபேன்டம் பிரதீப், மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்

Read the full e-paper

Translate »