சென்னை 31, அக்டோபர் 2026: இந்தியாவின் நான்கா வது நேவிகேஷன் செயற்கைக்கோளுட ன் இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல் வி-எஃப் 18 ராக் கெட். ஸ்ரீஹரிகோட் டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டா வது ஏவுதளத்தில் இருந்து இந்தாண்டின் 5-வது ராக்கெட் திட்டமான ஜிஎஸ்எல் வி-எப் 18 ராக்கெட் இன்று இரவு 11.51க்கு விண்ணில் ஏவப்பட வுள்ளது. சுமார் 50 மீட்டர் உயரமும் 420 ட ன் எடையும் கொண்ட மூன்று அடுக்கு ஜிஎஸ்எல்வி ராக்கெட், 2,250 கிலோ எடை கொண்ட என்விஎஸ்- 03 செயற்கைக் கோளை புவி ஒத் திசைவு சுற்றுப்பா¬ தயில் நிலைநிறுத்த வுள்ளது. ஏற்கனவே, இந்தியாவிற்கு 3 வழி காட்டல் அமைப்பு செயற்கைக்கோள் இருக்கும் நிலையில், தற்போது நான்காவது செயற்கைக்கோள் நேவிகேஷனுக்காக அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
நேவிக் எனப்படும் இந்தியாவின் வழி காட்டல் அமைப்பின் சேவைகள் தடை யின்றித் தொடர்வதை உறுதிசெய்யும் பொருட்டு இந்த செயற் கைக்கோள் வடிவமைக் கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான துல்லியமான இருப்பி டம், வழிகாட்டல் மற்றும் நேரச் சேவை களை இந்த செயற்கைக் கோள் வழங்கும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கான பிரத்யேகமான முறை யில் செயற் கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள் ளதாகவும் கூறப்பட் டுள்ளது.
