சென்னை 31, அக்டோபர் 2026: தெலுங்கு, பஞ்சாபி, இந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது தமிழ்த் திரை யுலகிலும் ’சைக்கிள் கேப்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார் நடிகை ஷெர்ரி அகர்வால். 1990களின் காதலில் இருந்த அப்பாவித்தனத்தையும் பழைய நினைவுகளை யும் இன்றைய தலை முறையின் உணர்வு களோடும் ரசனைக ளோடும் இணைக்கும் உணர்வுப்பூர்வமான மியூசிக்கல் காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘சைக்கிள் கேப்’.
இசை, காதல் மற்றும் அனைவருக்கும் நெருக்கமான மனித உணர்வுகளை மைய மாகக் கொண்டு உருவாகும் இப்படம், இரண்டு தலைமுறை களின் காதல் உணர்வு களையும் ஒரே கதை யில் இணைக்க முயல் கிறது. கடந்த காலத்தின் இனிமையான நினைவு களை மீட்டெடுக்கும் அதேவேளையில், இன்றைய தலைமுறை ரசிகர்களுடனும் தொடர்பை ஏற்படுத் தும் வகையில் இப் படத்தின் கதை அமைந் து ள்ளது. ட்யூப்லைட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள இப்படத்தில், தயாரிப் பாளரும் கதாநாயகனு மான நவாஸ§டன் இணைந்து ஷெர்ரி அகர்வால் நடித் துள்ளார்.
'சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் பணி யாற்றிய அனுபவம் குறித்து ஷெர்ரி அகர்வால் பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு நடிகையாக, ‘சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத பல நினைவு களை கொடுத்துள்ளது. படப்பிடிப்பு முழுவதும் பாசிட்டிவாக இருந்த துடன் படக்குழுவினர் அனைவரும் இனிமை யாக பழகினர். பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாக வும் மாற்றியது. இவர்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.
ட் யூ ப் ¬ ல ட் புரொடக்ஷன்ஸ், தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸ், இயக்குநர் எம்.ஆர். பாரதி சார், ஒளிப்பதிவாளர் சாலமன் சார், ஹேமந்த் செல்வராஜ் சார், எக்ஸி கியூடிவ் புரொடியூசர் சுஜா சூர்ய நிலா மற்றும் ‘சைக்கிள் கேப்’ படக் குழுவினர் அனைவருக் கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரி வித்துக்கொள்கிறேன். நிச்சயம் பார்வையாளர் களுக்கும் பிடித்த படமாக இது இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.
தெலுங்கில் ‘ஏப்ரல் 28த் எம் ஜரிகிந்தி?’, ‘ராம் அசுர்’, ‘ஐ ஹேட் யூ’ ஆகிய திரைப்படங் களிலும் ஷெர்ரி அகர் வால் நடித்துள்ளார். டீசர் வெளியாகியுள்ள ‘எந்தவாருகானி’ என்ற வ ர வி ரு க் கு ம் தெலுங்குப் படத்திலும், ‘ஆகர்ஷிதா’ என்ற கன்னடப் படத்திலும், ‘கௌஷிகி’, ‘ஐபிஎஸ் துபே’ ஆகிய இந்திப் படங்களிலும், ‘பெனாமி’ என்ற தெலுங்குப் படத்திலும் அவர் நடித்துள்ளார்.
திரைப்படங்கள் மட்டுமல்லாது, சௌபால் தளத்தில் வெளியிடப்பட்டு யூடியூப்பிலும் காணக் கிடைக்கும் பஞ்சாபி இணையத் தொடரான ‘ரேஞ்ச்’ தொடரிலும் நடித்துள்ளார். இதுதவிர, டி-சீரிஸ், ஜீ மியூசிக் மற்றும் ரெட் ரிப்பன் மியூசிக் உள்ளிட்ட நிறுவனங் களின் தயாரிப்புகளில் உருவான பஞ்சாபி மற்றும் இந்தி இசை வீடியோக்களிலும் அவர் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தான் அறிமுகமாகும் ‘சைக்கிள் கேப்’ தனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் என்கிறார் ஷெர்ரி அகர்வால். இசை, காதல் மற்றும் 1990 களின் காதலில் நிறைந் திருந்த அப்பாவித்தனம் ஆகியவற்றின் கலவை யாக உருவாகியுள்ள இப்படம், பல தலை முறை ரசிகர்களின் மனங்களிலும் உணர்வு பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
