சென்னை 31, அக்டோபர் 2026: ஊபர் நிறுவனம், தனது ஓட்டுநர்களுக் கான 'ஊபர் பிரகதி' மூன்றாம் பதிப்பு நிகழ்வில், அவர்களுக் கான பிரத்யேகப் புதிய அம்சங்களை இன்று வெளியிட் டுள்ளது.
ஓட்டுநர்கள் எளிதாகவும், பாது காப்பாகவும், கூடுதல் வருவாய் ஈட்டும் வகையிலும் இந்த அமைப்புகள் உரு வாக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர்கள் தங்க ளுக்கு நெகிழ்வான முறையில் வேலை செய்யும் வாய்ப்புகள், புதிய வருமான வழிகள் மற்றும் வாகனம் ஓட்டும் போது கூடுதல் பாதுகாப்பு வழங்கும் அம்சங்கள் இதில் அடங்கும். மேலும், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உதவி மற்றும் சர்ச்சைக்குரிய சம்பவங்களில் உண்மைகளைக் கண்டறிய உதவும் செயலியில் உள்ள குறியாக்கம் செய்யப் பட்ட ( encrypted ) வீடியோ பதிவு முறை உட்பட, தனது இணையற்ற பாது காப்பு தொழில்நுட் பத் தின் நிஜ உலகத் தாக்கத்தையும் ஊபர் எடுத்துக்காட்டி யுள்ளது.
ஊபர் இந்தியா மற்றும் தெற்காசியா வின் விநியோக செயல் பாடுகள் பிரிவின் இயக்குநர் ஆதித்யா கபூர் பேசுகையில், "இந்தியாவில் நெகிழ் வான வருமான வாய்ப்புகளை வழங்கும் முதன்மைத் தளமாகத் தொடர்ந்து நீடிப்பதே எங்கள் விருப்பம். அதாவது, ஓட்டுநர் களுக்குத் தங்கள் சொந்த விருப்பப்படி பணியாற்றும் சுதந்திரம், துறைசார்ந்த சிறந்த பாதுகாப்பு அமைப்பு கள் மீதான நம்பிக்கை மற்றும் ஈட்டுவதற்கு அதிக வழிகளை வழங்கு வது ஆகும். ஒரு செயலியிலிருந்து ஓட்டு நர்கள் என்னென்ன எதிர்பார்க்கலாம் என்ப தற்கான புதிய தரநிலை யைத் தொடர்ந்து அமைக்க நாங்கள் விரும்புகிறோம்," என்று கூறினார்.
ஓட்டுநர்களின் கருத் துக்களின் அடிப்படை யில் கொண்டுவரப்பட் டுள்ள முக்கிய மேம் பாடுகள்:
எளிதானது: அதிக நெகிழ்வுத்தன்மை, குறைவான சிரமம்
ஃபிளெக்சிபிள் டிரைவ் பாஸ் துறையி லேயே முதன்முறை பகுதிநேர மற்றும் முழுநேர ஓட்டுநர்கள் இருவரின் தேவைகளை யும் பூர்த்தி செய்யும் வகையில், 6 மணி நேரம் முதல் 180 நாட்கள் வரையிலான சந்தா திட்டங்கள் ( subscription passes ) மூலம் ஓட்டுநர்களுக்கு அதிகபட்ச தேர்வுகளை ஊபர் வழங்குகிறது.
குவிக்பாஸ் | ரைடு-ஹெய்லிங் துறையி லேயே முதன்முறை ஓட்டுநர்கள் தாங்கள் தினமும் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலி மூலமாகவே ஊபரில் மிக எளிதாகவும் வசதி யாகவும் இணைந்து கொள்ளலாம்.
'முதலில் சம்பாதி யுங்கள், பிறகு செலுத்துங்கள்' ( Earn First, Pay Later ) பிற தளங்களில் உள்ள முன் கூட்டியே கட்டணம் செலுத்தும் முறை களைப் போலல்லாமல், 'முதலில் சம்பாதி யுங்கள், பிறகு செலுத் துங்கள்' என்ற திட்டத் தின் மூலம் தகுதியான ஓட்டுநர்களின் கணக்கு இருப்பு குறைந்தாலும், கூடுதல் கடன் வரம்பிற் குள் (கிரெடிட் லிமிட்) அவர்கள் தொடர்ந்து பணக் கட்டணப் பயணங்களை (கேஷ் ட்ரிப்ஸ்) மேற்கொள்ள ஊபர் அனுமதிக்கிறது. இது அவர்களின் அன்றாடப் பணிக்கு எந்தவிதத் தடங்கலும் ஏற்படுவதைத் தடுக்கிறது. வாசிப்பதை விட குரல்வழிக் கேட் பதை யே ஓட்டுநர்கள் அதிகம் விரும்புவதால், ஊபரின் செயலிக்குள் இருக்கும் சேட் ( in-app chat ) அம்சம் மூலம் பயணிகள் உடன் 'வாய்ஸ் நோட்ஸ்' வழியாக இனி அவர்கள் தொடர்புகொள்ளலாம்
