சென்னை 29, அக்டோபர் 2026: அரசுமுறைப் பயண மாக இந்தியா வந் துள்ள லிக்டென்ஸ் டைன் இளவரசர் திரு அலோயிஸ், மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயலுடன் பேச்சு நடத்தினார்.
புதுதில்லியில் 2026 அக்டோபர் 28, அன்று நடைபெற்ற இந்தச் பேச்சுவார்த்தையின் போது, இந்திய-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கத்தின் வர்த்தகம், பொருளா தார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளிடையேயான பொருளாதார உறவு களை வலுப்படுத்துவது, முதலீட்டு வாய்ப்பு களை மேம்படுத்துவது கு றித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்தியாவின் வலு வான பொருளாதார நிலை, தொடர்ச்சியான சீர்திருத்த நடவடிக் கைகள், அதிகரித்து வரும் உற்பத்தித் திறன் ஆகியவை சர்வதேச முதலீட்டாளர்களுக்குப் பெரும் வாய்ப்பை வழங்குகிறது என்று அமைச்சர் எடுத் துரைத்தார்.
வணிகம் செய்வதை எளிதாக்கு தல், ஒழுங்கு முறை நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், டிஜிட்டல் நிர்வாகத் தை வலுப்படுத்துதல், கணிக்கக்கூடிய, வெளிப்படையான, போட்டித்தன்மை கொண்ட வணிகச் சூழலை உருவாக்குதல் ஆகியவற்றிற்காக மத்திய அரசு மேற் கொண்டு வரும் தொடர் முயற்சிகளை அவர் சுட்டிக் காட்டி னார்.
முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியா உருவெடுத்து வருவதன் காரணமாக, அதன் ªÐ£ருளாதார வாய்ப்புகள் மீது உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. 2014-15 முதல் 2025-26 வ ¬ ர யி ல £ ன நிதியாண்டுகளில், திரட்டப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 843 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
இதில், 2025-26-ம் நிதியாண்டில் மட்டும் 94.53 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீடுகளை ஈர்த்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
