hello madras mobile banner 1200x300

அரிசி விலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஆந்திர நெல் விற்பனைக்கு அனுமதி: அமைச்சர்கள் தகவல்

சென்னை 29, அக்டோபர் 2026: தமிழகத்தில் அரிசி விலையை கட்டுப் படுத்த, தமிழகத்தில் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் விற்பனைக்கு அனும திக்கப்படும் என்று திருத்தணி அருகே ª ப £ ன் ப £ டி சோதனைசாவடியில் இன்று காலை ஆய்வு பணியின்போது அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், வெங்கட்ரமணன் ஆகியோர் தெரிவித் தனர்.

திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை யில், தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பொன் பாடி சோதனை சா வடியில் இன்று காலை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டை யன், வெங்கட் ரமணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை யில் ஆந்திர எல்லையில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை தொடர் பான ஆவணங்களை ஆய்வு செய்து, அது தொடர்பான பல்வேறு விவரங்களை சோதனை சாவடி அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரிசி விலையை கட்டுப் படுத்த, ஆந்திராவில் இருந்து நெல் மூட்டை களை கொண்டு வந்து தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று அமைச்சர்கள் செங் கோட்டையன், வெங் கட்ரமணன் ஆகியோர் தெரிவித்தனர். முன்ன தாக, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங் களில் ஆந்திர நெல் மூட்டை விற்ப னைக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது.

இதனால், ஆந்திரா வில் இருந்து தமிழகத் துக்கு வரும் நெல் மூட்டைகள் முழுமை யாக தடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக அரிசி விலை கிடுகிடு வென உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read the full e-paper

Translate »