சென்னை 29, அக்டோபர் 2026: எம்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப் பில் உருவாகும் இளமைத் துள்ளல் நிறைந்த ரொமாண் டிக் காமெடி திரைப் படம் ‘லவ் இங்க்’. ஏ. மகேந்திரன் வழங்க, மேகராஜ் தாஸ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தில் ராஜ் அய்யப்பா மற்றும் டெல்னா டேவிஸ் முன்னணி கதாபாத் திரங்களில் நடிக் கின்றனர்.
இன்றைய இளம் தலைமுறையினரின் காதல், உணர்வுகள் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு, நகைச்சுவை மற்றும் எதிர்பாராத திருப்பங் களுடன் ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராகி வருகிறது.
இப்படத்தின் படப் பிடிப்பு இறுதிக்கட்டத் தை எட்டியுள்ள நிலையில், நடிகர் சுனில் ரெட்டி தற்போது ª சன்னையில் நடை பெற்று வரும் இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
இன்றைய தலை முறையின் சமகால உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் ‘லவ் இங்க்’, நவீன காதலை ரசிக்கத்தக்க வகையில் நகைச்சுவை யுடன் சொல்லும் படமாக அமைவதுடன், அனைத்து வயதினரை யும் கவரும் வகையிலும் உருவாகி வருகிறது.
இப்படத்தில் சுனில் ரெட்டி, ஆர்த்தி, ரவி மரியா, மைம் கோபி, பட்டிமன்றம் ராஜா, ரமா, சுபாஷினி, வினோத் முன்னா, கேபிஒய் வினோத், மௌரிஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத் திரங்களில் நடிக் கின்றனர்.
சென்னையில் தொடங்கிய இப்படத் தின் படப்பிடிப்பு, பின்னர் திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதி யில் நடைபெற்றது. தற்போது படக்குழு மீண்டும் சென்னையில் இறுதிக்கட்ட படப் பிடிப்பு நடைபெற்று வருகிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணி களும் முழுவீச்சில் நடைபெறும். திட்ட மிட்டபடி வரும் டிசம் பர் மாதம் படத்தைத் திரைக்கு கொண்டுவர படக் குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வரு கின்றனர்.
படம் குறித்துப் பேசிய இயக்குநர் மேக ராஜ் தாஸ், “இன்றைய ஜென்ஸீ தலைமுறை யினருக்கு பிடித்த படமாக ‘லவ் இங்க்’ நிச்சயம் இருக் கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் பணி யாற்றிய அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர். ரசிகர் களுக்கும் படம் நிச்சயம் பிடிக்கும். இளைஞர் களை மட்டுமல்லாமல், குடும்பத்துடன் அமர்ந்து ரசித்து, கொண்டாடக்கூடிய படமாகவும் ‘லவ் இங்க்’ இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றார்.
மேகராஜ் தாஸ் எழுதி இயக்கியிருக்க, மகேந்திரன் வழங்கும் இப்படத்தை எம்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு தரண் குமார் இசையமைக் கிறார். ஒளிப்பதிவை ஐ. மருத நாயகம் மேற் கொள்ள, கலை இயக்கு நராக ராமு தங்கராஜ் பணி யாற்றுகிறார். புவன் படத்தொகுப்புப் பணி களைக் கவனிக் கிறார்.
‘லவ் இங்க்’ திரைப் படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்கு களில் வெளியாக வுள்ளது.
