hello madras mobile banner 1200x300

கொல்கத்தா துறைமுகத்தில் ரூ.13.5 கோடி மதிப்பிலான 55 ஆயிரம் ஈ சிகரெட்டுகள் பறிமுதல்

சென்னை 29, அக்டோபர் 2026: கொல்கத்தா ஷியாமா பிரசாத் முகர்ஜி துறை முகத்தில் சட்ட விரோதமாக கடத்திக் கொண்டுவரப்பட்ட 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈ சிக ரெட்டுகளை வருவாய் புலனாய்வு இயக்கு நரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நேபாளத்தில் இருந்து வந்த கப்பலில் இரண்டு பெட்டகங் களின் மீது சந்தேக மடைந்த வருவாய் புல னாய்வு இயக்குநரக அதிகாரிகள் அதனை சோதனையிட்டனர். அப்போது ஒரு பெட்ட கத்தில் 40 ஆயிரம் ஈ சிகரெட்டுகளும், மற் றொரு பெட்டகத்தில் 15 ஆயிரம் ஈ சிகரெட் டுகளும் இருப்பதை கண்டறிந்த அதிகாரி கள் அதனை பறிமுதல் செய்தனர்.

அவற்றின் மொத்த மதிப்பு ரூ.13.5 கோடி யாகும். 2026 – 27-ம் ஆண்டு நிதியாண்டில் மகாராஷ்டிரா, குஜராத், தில்லி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இதுவரை மேற்கொள் ளப்பட்ட சோதனை களில் ரூ.120 கோடி மதிப்பிலான சுமார் 3 லட்சம் ஈ சிகரெட்டுகள் வருவாய் புலனாய்வு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது.

Read the full e-paper

Translate »