சென்னை 29, அக்டோபர் 2026: கிராமப்புற நிர்வாகக் கட்டமைப்பை வலுப் படுத்தவும், ஒருங் கிணைந்த கிராம வளர்ச்சியை முன் னெடுக்கவும் ரூ.7,395 கோடி மதிப்பிலான பிரதமரின் வளர்ச்சி அடைந்த கிராம தன்னாட்சித் திட்டத் திற்கு மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உலகத்தரம் வாய்ந்த விளையாட்டுப் பொருட்கள் உற்பத்திச் சூழலை உருவாக்கும் நோக்கில், கேலோ இந்தியா விளை யாட்டுப் பொருட்கள் உற்பத்தித் திட்டத் திற்கும், உள்நாட்டு உ ற்பத்தியை ஊக்கு விக்கும் வகையில் ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் கண்டெய் னர் தயாரிப்புத் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்ப தாவது: இந்தியாவின் கடல்சார் மற்றும் சரக்குப் போக்கு வரத்துத் துறைக்கு ஒரு பெரும் உத்வேகம்; கண்டெய்னர் உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத் திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய மற்றும் ஏற்கனவே உள்ள உற்பத்தியாளர்களுக்கு நிதி உதவி;
உ ல க ள வி ல் போட்டித்தன்மை வாய்ந்த, தரச் சான்றிதழ் பெற்ற கண்டெய்னர் கள்; இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும். அமைச்ச ரவையால் அங்கீகரிக் கப்பட்ட கேலோ இந்தியா விளை யாட்டுப் பொருட்கள் உற்பத்தித் திட்டம் ஒரு திருப்புமுனையாக அமையும்.
முதலீட்டு வாய்ப்பு கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவ னங்களுக்கான ஆதரவு அளிப்பது; ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் திறன் மேம்பாடு, தரத்தின் மீது கவனம், அதிக வேலைவாய்ப்பு கள் மற்றும் ஏற்றுமதி வ £ ய் ப் பு க ள் அதிகரிக்கும்.
மேக் இன் இந்தியா, ஆத்மநிர்பர் பாரத் மற்றும் இந்தியாவின் உலகளாவிய விளை யாட்டு லட்சியங் களுக்கு ஒரு பெரும் முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
