சென்னை 25, அக்டோபர் 2026: 'மக்களுக்கான கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய் க்கு விற்று கொள்ளை அடிப்பது தான் டம்மி சிம் சொன்ன மாற்றமா?' என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பத்திவிட்டுள்ளதாவது; "அரிசி விலையேற்றத் துக்கான தீர்வாக, கூட்டுறவு அங்காடி களில் சன்னரகப் பொன்னி அரிசியை ரூ.30-க்கு வாங்கலாம் என்று இந்த அரசு அறிவித்தது. அதை நம்பி ரேஷன் கடை களுக்குப் போனால், வழக்கமாக வழங்கப் படும் கட்டணமில்லா அ ரிசியை பாலிஷ் போட்டு, சன்னரகப் பொன்னி அரிசி என்று விற்கப் படுவதாக தமிழ் நாடெங்கும் பொது மக்கள் குற்றஞ்சாட்டு கின்றனர். பல இடங் களில் அரிசியை திருப்பிக் கொடுத்தும் வருகின்றனர்.
கம்பத்தில் பாலிஷ் செய்யப் பட்ட அரிசி வழங்கப் பட்டதால், த.வெ.க எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொது மக்கள் கேள்வி எழுப் பிய போது, கரூர் பாணி யில் ஓட்டெமெடுத்து இருக்கிறார் அந்த எம்எல்ஏ.
தமிழ்நாட்டில் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கும் போது, வெறும் 250 இடங் களில் – அதுவும் குடும்பத்துக்கு தலா 5 கிலோ மட்டும் என, சன்ன ரகப் பொன்னி என்ற பெயரில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
2007-ல் அத்தியா வசியப் பொருட்களின் விலை உயர்ந்த போது, அன்றைய முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சிறப்பு பொதுவிநி யோகத் திட்டத்தை அறிவித்து, வெளிப் படையான முறையில் டெண்டர் விட்டு, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்கினார்கள். ஆனால், இந்த கோமாளி அரசு, சன்ன ரகப் பொன்னி அரிசி யைக் கொள்முதல் செய்வதற்கு எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை?
என்ன விலைக்கு அவர்கள் அரசுக்கு பொன்னி அரிசியை வழங்கினார்கள்? த.வெ.க அரசு பொது மக்களுக்கு எவ்வளவு மானிய விலையில் அரிசியை வழங்கு கிறது? இது குறித்து பாலிஷ் எதுவும் போடாமல் வெளிப் படைத்தன்மையுடன் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
