சென்னை, 24 அக்டோபர் 2026: முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று தலை மைச் செயலகத்தில், வேளாண்மை-உழவர் நலத் துறைக்கு தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் உதவி வேளாண் மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங் களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 69 நபர் களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங் கினார். அதனைத் தொடர்ந்து, தருமபுரி, செங்கல்ராயன், சுப்ர மணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி-மிமி ஆகிய நான்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்கள் தேசிய அளவில் பெற் றுள்ள விருதுகளைக் காண்பித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வாழ்த்து களைப் பெற்றனர்.
வேளாண்மை-உழவர் நலத் துறையின் திட்டங்களைக் கள அளவில் செயல்படுத்தி வரும் உதவி வேளாண் மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங் களி ல் அவ்வப்போது ஏற்படும் காலிப்பணி யிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவு செய்யப் பட்ட 26 உதவி வேளாண்மை அலுவலர் கள், 43 உதவி தோட்டக்கலை அலுவ லர்கள் என மொத்தம் 69 நபர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பணிநியமன ஆணை களை இன்று வழங்கி வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொண்டார்.
2024-2025ஆம் ஆண்டிற்கான நிதி மேலாண்மைக்கான முதல் பரிசை தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமி டெட் நிறுவனத்திற்கும், 2024-2025ஆம் ஆண்டிற்கான சமூகப் பொறுப்பிற்கான விருதை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத்திற்கும், 2025- 2026ம் ஆண்டிற்கான நிதி மேலாண்மைக்கான முதல் பரிசை சுப்ர மணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத் திற்கும், சிறந்த செயல் திறனுக்கான சர்க்கரை ஆலைக்கான விருதை கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத்திற்கும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட் டமை ப்பு வழங்கியுள்ளது.
மேற்குறிப்பிட்ட நான்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்கள், முதலமைச்சர் அவர் களிடம் விருதுகளைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.இந்நிகழ்வில், அமைச்சர் ர.வினோத், தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை உழவர் நலத் துறை செயலாளர் நா. வெங்கடேஷ், சர்க்கரைத் துறை ஆணையர் இரா. கண்ணன், வேளாண் மை இயக்குநர் க.வீ. முரளீதரன் தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் ஜெ. விஜயா ராணி, சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குநர் ச. அருண்ராஜ் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க் கரை ஆலை செயலாட் சியர் ஆர். பிரியா தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் / மாவட்ட வருவாய் அலுவலர் பி. மேனகா, செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் / மாவட்ட வருவாய் அலுவலர் ஏ. பூங் கோதை, கள்ளக்குறிச்சி- 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் (பொறுப்பு) / மாவட்ட வருவாய் அலுவலர் பி. மணிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
