சென்னை 24, அக்டோபர் 2026: தமிழகத்திற்கு காவிரி யில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு நாள் தோறும் வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசு க்கு காவிரி மேலாண் மை ஆணையம் உத்தர விட்டுள்ளது. டெல்லி யில் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடை பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நிறைவு பெற்றது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பகிருவு உள்ளிட்ட விவகாரங் கள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணை யம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை அவ்வப் போது கூடி வழிகாட்டு தல்களை வழங்கி வருகின்றன. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீர மு ழுமையாக வழங்கப் படாத நிலையில் தமிழ் நாடு அரசு இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளது.
காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி விதம் 15 நாட்களுக்கு திறந்து கர்நாடக அரசு திறந்து விட காவிரி நீர் மேலாண்மை ஆணை யத்திற்கு பரிந்துரைத்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணை யத்தின் 60-வது கூட்டம் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலை மையில் இன்று ரூடை பெற்றது. இக்கூட்டத் தில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 7500 கன அடி நீர் திறக்க தமிழ் நாடு தரப்பில் கோரிக் கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கை மேலாண்மை ஆனை யம் நிராகரித்தது. மேலும் காவிரியில் வினாடிக்கு 3000 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு காவிரி மேலாணமை ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று காவிரி நீர் « ம ல £ ண் ¬ ம ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் உத்தர வை பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து கூட்டம் நிறைவடைந் தது. காவிரி நீர் மேலாண்மை ஆணை யத்தின் அடுத்த கூட்டம் (61வது) நவம்பர் 6-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
