hello madras mobile banner 1200x300

ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!

சென்னை 25, அக்டோபர் 2026: ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ மற்றும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த், ‘கணம்’ பட இயக்கு நர் ஸ்ரீ கார்த்திக்குடன் முதன்முறையாக இணைகிறார். தேவ் ராம்நாத், விநாயக் வைத்யநாதன் நடிக் கும் இப்படத்தை மேட்பாய்ஸ் என்டர் டெயின்மென்ட் மற்றும் சிருனி சினி கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக் கின்றன. இந்தப் படத் தை சாய் கிருஷ்ணா கட்வால் இணைந்து தயாரிக்கிறார்.

‘சப்த சாகரதாச்சே எல்லோ’, ‘காந்தாரா: சாப்டர் 1’ ஆகிய படங் களில் தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ருக்மிணி வசந்த், தற்போது ‘கணம்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் படத்தில் கதாநாயகி யாக நடிக்கிறார். இன்னும் தலைப்பிடப் படாத இந்தப் படத்தில் ருக்மிணி வசந்துடன் இணைந்து தேவ் ராம்நாத் மற்றும் வி நாயக் வைத்யநாதன் ஆகியோரும் முதன் மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ருக்மிணி வசந்த் மற்றும் ஸ்ரீ கார்த்திக் இணையும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத் தக்கது.

காலப்பயணம் எனும் புதுமையான கற்பனை கருவுடன், தாய் – மகன் உறவின் உணர்வுப்பூர்வமான ஆ ழ த் ¬ த யு ம் இணைத்து உருவான ‘கணம்’ திரைப்படத்தை தொடர்ந்து, ஸ்ரீ கார்த்திக் தனது அடுத்த படைப்பின் மூலம் புதிய கதைக்களத்தை யும், வித்தியாசமான கலைஞர்களின் கூட்டணியையும் ரசிகர் களுக்கு அறிமுகப் படுத்துகிறார்.

இந்தப் படத்தின் அறிவிப்பை வித்தியாச மான முறையில் வெளி யிட்டுள்ள படக்குழு, ருக்மிணி வசந்த் ஏற்று நடிக்கும் ‘தாரா’ கதா பாத்திரத்தை அறிமுகப் படுத்தும் பிரத்யேக அறிவிப்பு வீடியோவை யும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ஸ்ரீ கார்த்திக், தேவ் ராம் நாத் மற்றும் விநாயக் வைத்யநாதன் ஆகியோர் ‘தாரா’ கதாபாத்திரத்திற்கான இறுதி தேர்வில் ஈடுபடுகின்றனர். அந்த சூழலில் எதிர்பாராத விதமாக வரும் ஓர் அறிவிப்பு அவர்களை திகைக்க வைக்கிறது. தொடர்ந்து, ருக்மிணி வசந்த் அறிமுக மாகும் காட்சியுடன் வீடியோ நிறைவடை கிறது. இதன் மூலம் படத்தின் உலகம் குறித்த முதல் பார்வையை ரசிகர் களுக்கு வழங்கியிருக் கிறது படக்குழு.

பட அறிவிப்பை வெளியிடுவதிலும் புதுமையான அணுகு முறையை கையாண் டுள்ள மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், கடந்த 18 மாதங்களில் எதிர் கொண்ட ஏற்ற தாழ்வு கள், சவால்கள் மற்றும் அனுபவங்களை மைய மாக கொண்டு, இன்ஸ் டாகிராமில் பிரத்யேக மாக ஒளிபரப்பப்படும் கற்பனை கலந்த ஆவண தொடர் ஒன்றை உருவாக்கியுள்ளது.

இதுவரை ஒன்பது அத்தியாயங்களை கடந்துள்ள இந்த தொடர் நிஜ அனுபவங் களையும் கற்பனை வடிவிலான காட்சி களையும் இணைத்து, இறுதியில் ருக்மிணி வசந்த் ‘தாரா’ கதாபாத் திரத்தில் நடிப்பதை வெளிப்படுத்தியுள்ளது. படைப்பாற்றலுக்கும் வழக்கத்திற்கு மாறான கதை சொல்லல் முறைக் கும் முக்கியத்துவம் அளிக்கும் மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தனித்துவ மான முயற்சியாக இது அமைந்துள்ளது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »