சென்னை 25, அக்டோபர் 2026: இந்தியக் குடிமக்கள் மற்றும் வெளிநாட் டினருக்கு வழங்கப் படும் அல்லது புதுப் பிக்கப்படும் ஓட்டுனர் உரிமங்களுக்கு வெவ் வேறு நிறங்களை அறி முகப்படுத்த சாலைப் போக்குவரத்து அமைச்சகம் திட்ட மிட்டுள்ளது.
மோட்டார் வாகன விதிகளில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு சாலைப் போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முன் மொழிந்துள்ளது.
மோட்டார் வாகன விதிகளில் கொண்டு வரப்படவுள்ள திருத் தங்கள் குறித்த வரைவு அ றிக்கையில், ஓட்டுனர் உரிமத்தில் உரிமம் பெற்றவரின் ரத்த வகை, அலைபேசி எண் மற்றும் அவசர காலத் தொடர்பு எண்கள் குறிப்பிடுவது கட்டாய மாக்கப்படும்.
வயது மற்றும் முகவரிக்கான சான்றாக நிர்வாக நீதிபதி அல்லது நோட்டரி முன்னிலை யில் உறுதிமொழிப் பத்திரம் சமர்ப்பிக்கும் முறையை நீக்கப்படும்.
உரிமம் வழங்கும் அதிகார அமைப்பால் வழங்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும் ஒவ்வொரு ஓட்டுனர் உரிமமும் படிவம் 7-ன் கீழ் லேமினேட் செய்யப்பட்ட அல்லது பாலிவினைல் குளோ ரைடு அட்டையாக இருக்க வேண்டும். இதில் இந்தியக் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கான ஓட்டுனர் உரிமங் களுக்குத் தனித்தனி வடிவங்கள் இடம்பெற வேண்டும்.
முறைகேடுகளை தடுக்கும் வகையில் வயது மற்றும் முகவரிக்கான சான்று களாக உறுதிமொழிப் பத்திரங்கள் மற்றும் ஆயுள் காப்பீட்டு ஆவணங்களை ஏற்றுக் கொள்வதற்கும் அமைச் சகம் முன்மொழிந் துள்ளது.
பாதுகாப்பாக ஓட்டு தல் குறித்த பயிற்சி மதிப்பீட்டில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி யானது 60 சதவீதத்தில் இருந்து 75சதவீதமாக உயர்த்தப்படும். ஆதார் அங்கீகாரத்தின் மூலம் இணையவழியில் பெறப்படும் சில ஓட்டுனர் உரிமச் சேவைகளுக்கு கட்டண விலக்கு அளிக்கவும் முன்மொழியப்பட் டுள்ளது.
