hello madras mobile banner 1200x300

டெல்லி தசரா விழா: பிரதமர் மோடி ராவண வத நிகழ்ச்சியில் பங்கேற்பு!

சென்னை, 21 அக்டோபர் 2026: விஜய தசமி திருநாளை முன்னிட்டு, டெல்லி யில் உள்ள டி.டி.ஏ. உற்சவ மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பாரம்பரிய முறைப்படி ராவணனின் உருவ பொம்மையை எரித்து விழாவைச் சிறப்பித் தார். இந்த விழாவில், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அவர் தனது உளமார்ந்த நல்வாழ்த்து களைத் தெரிவித்தார்.

இதையடுத்து அவ் விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி; "இராமராஜ்யம் என்பது பாகுபாடுகள் அற்ற, நீதி நிலைநாட்டப்பட்ட மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்படக்கூடிய ஒரு சிறந்த நிர்வாக மு றை யை க் குறிக்கிறது. ஏழைகளையும் விளிம்பு நிலை மக்களையும் சேர்ப்பதுதான் நமது மிக உயர்ந்த முன்னுரி மையாக இருக்க வேண்டும்.

எவ்வளவு பெரிய நெருக்கடியாக இருந்தாலும், நமது சொந்த திறனை நம்பி, கடின உழைப்பால் தீர்வுகளைக் காண வேண்டும் என்ற பாடத்தை இராமரின் வாழ்க்கை நமக்குக் கற்பிக்கிறது" என்று குறிப்பிட்டார். மேலும், வளர்ந்த இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா இலக்குகளை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து முன் னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே, டெல்லி துவாரகா பகுதியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்ட மற்றொரு பிரம்மாண்ட தசரா விழாவில் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா உரை யாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ஊழல், போதைப் பொருள் பாவனை, குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் போன்ற சமூகத் தீமைகளைக் களைவதற்கு மக்கள் அனைவரும் ஸ்ரீராமரின் இலட்சியங்களைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், விஜய தசமி என்பது பொய்மைக்கு எதிரான உண்மையின் வெற்றி மற்றும் அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றியைக் குறிக்கும் அடையாள மாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் விஜய தசமி திருவிழா வானது, ஆன்மீக நிகழ்வுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் ராவண வதத்துடன் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »