hello madras mobile banner 1200x300

கரும்பு விவசாயிகள் பிரச்னை, வறட்சி குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்: முதல்வர் டி.கே.சிவகுமார் தகவல்

சென்னை 21, அக்டோபர் 2026: கரும்பு விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல் கள் மற்றும் வறட்சி நிலை குறித்து விவா திக்க, பிரதமரை சந்திக்க நேரம் கோரி யுள்ளேன். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய குழு என்னுடன் வந்து பிரதமரை சந்திக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்வேன் என்று முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித் தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, கலபுர்கியில் பயங்கர வாதி கைது செய்யப் பட்டுள்ளார். அவரிடம் தகவல்களைச் சேகரிக் கவும், விசாரணை நடத்தவும் காவல் துறை க்கு நான் முழு சுதந்திரம் அளிக்கிறேன். இத் தகைய விவகாரங்கள் தொடர்பாக நாம் அரசியல் ரீதியான கருத்துகளைத் தெரி விக்கக் கூடாது.

மேலும் மாநில சட் டப்பேரவைக்கு வரும் 2028ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் மாநிலத்தில் கூட்டணி அரசு அமையும் என்று பாஜ மற்றும் மஜத தலைவர்கள் கூறி வருகிறார்கள், அவர்கள் கனவு பலிக்க இறைவன் அவர்களுக்கு நன்மை யைச் செய்யட்டும். பெரும்பான்மை இடங் களை பெற தவறினால் தங்கள் கட்சிகளை கலைத்துவிடுவதாக அவர்கள் கூறவில்லை யா? அதை அவர்கள் செய்யவில்லையே? கரும்பு விவசாயிகள் போராட்டம் குறித்து நான் விவசாயிகளிடம் பேசியிருக்கிறேன். ஊடகங்கள் வாயிலாக அவர்களிடம் மீண்டும் ஒருமுறை வேண்டு கோள் விடுக்கிறேன், தயவுசெய்து போராட் டத்தைக் கைவிடுங்கள். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும். இதில் அரசியல் செய்வதிலோ அல்லது யாரையும் குறை கூறிப் பேசுவதி லோ எந்த பயனும் இல்லை. மற்றவர்கள் வேண்டு மானால் அப்படி செய்யலாம், ஆனால் நான் அவ்வாறு செய்ய மாட்டேன். ம £ நி ல த் தி ன் முதலமைச்சராக, நான் வெறும் குற்றச் சாட்டுகளை முன்வைப் பதில் மட்டும் ஈடுபடக் கூடாது. அந்த வேலை யை மற்றவர்களிடம் விட்டுவிட்டேன். விவசாயிகளின் மற்றும் மக்களின் நலனை உறுதி செய்வதே எங்கள் நோக்கம். விவசாயி களின் வாழ்வு எங்க ளுக்கு மிக முக்கியமான தாகும். கரும்புக்கான ஆதார விலைக்கு மாநில அரசும் நிதி பங்களிப்பு வழங்குவது தொடர்பாக நாம் விவாதிப்போம். மாநிலத்தில் பல்வேறு வகையான விவசாயிகள் உள்ளனர். நாம் அனை வரையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மாநிலத்தில் 226 தாலுகாக்கள் கடும் வறட்சியில் உள்ளது. விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளனர். கரும்பு விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி யை சந்தித்து பேசுவதற் காக நேரம் ஒதுக்கி கொடுக்கும்படி கேட் டுள்ளேன். பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கினால், அனைத்து கட்சிகளின் பிரதிநிதி கள் குழு, விவசாய சங்க பிரதிகளுடன் சந்திப் போம். இதற்கு அனை வரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »