hello madras mobile banner 1200x300

டெல்டாவில் 4வது நாளாக கன மழை; 1,500 ஏக்கர் சம்பா பயிர் மூழ்கியது 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு

சென்னை 25, அக்டோபர் 2026: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 4ம் நாளாக நேற்றிரவும் கன மழை பெய்தது. தஞ்சையில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. கரூரில் நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை பலத்த மழை கொட்டி யது. புதுக்கோட்டை யில் நேற்றிரவு சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அரியலூர் அருகே தா. பழூர் சிந்தாமணியில் சாலையோரம் இருந்த புளியமரம் சாய்ந்து மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால் அந்த பகுதியில் இரவு 10.30 மணி முதல் இன்று காலை வரை மி ன்சாரம் தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

திருவாரூர் மாவட் டம் மன்னார்குடி ஒன்றி யத்தில் 700 ஏக்கர், கோட்டூர் ஒன்றியத்தில் 175 ஏக்கர், குடவாசல் ஒன்றியத்தில் 75 ஏக்கர், கொரடாச்சேரி ஒன்றி யத்தில் எட்டியலூர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஏக்கர், நாகை மாவட் டம் தலைஞாயிறு பகுதிகளில் 70 ஏக்கர், திருச்சி திருவளர் சோலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் என சுமார் 1500 ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

2 பெண்கள் பலி;

திருவாரூர் மாவட் டம் மன்னார்குடி அடுத்த 78 நல்லூர் கிராமம் ஆற்றங்கரை யை சேர்ந்த வடிவேல் மனைவி முத்தம்மாள் (55). அதே பகுதியில் வயலில் களை எடுக்க சென்றுவிட்டு மாலை 5.30 மணியளவில் வீட்டுக்கு வரப்பில் நடந்து வந்தார். அப்போது பெய்த மழையில் மின்னல் தாக்கியதில் படுகாய மடைந்த அவர் திருவா ரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட் டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதேபோல் மழையின் காரணமாக திருவாரூர் தாலுகா வைப்பூர் அடுத்த திருப்பள்ளிமுக்கூடலை சேர்ந்த தியாகராஜன் (65), இவரது மனைவி ராகினி(60) ஆடுகளை மேய்க்க சென்றபோது ஒரு வீட்டின் சுவரில் கைவைத்தபோது மின்சாரம் பாய்ந்ததில் ராகினி அந்த இடத்தி லேயே பலியானார்.

உப்பு உற்பத்தி நிறுத்தம்; நாகை மாவட்டம் வேதா ரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடி யக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்றது. கடந்த 3 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் உப்பு உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட் டுள்ளது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »