hello madras mobile banner 1200x300

கடமலை மயிலை ஒன்றியம் முத்தாலம் பாறையில் அதிமுக ஆலோசனை கூட்டம்…

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம்ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை  ஒன்றிய அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் முத்தாலம்பாறையில்  நடந்தது. தெற்கு ஒன்றிய கழக செயலாளர் தர்மராஜ் வரவேற்றார். வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கொத்தாளமுத்து தலைமை வகித்தார். மாவட்டக் கழகச் செயலாளர் சையதுகான், மாவட்ட கழக துணைச்செயலாளர் முருக்கோடை இராமர் ,ஆண்டிபட்டி ஒன்றியச் செயலாளர் லோகிராஜன், மாவட்ட கவுன்சிலர் இளம்வழுதி பாண்டியன் ,பெரியகுளம் ஒன்றியச் செயலாளர்கள் அன்னபிரகாஷ், செல்லமுத்து  ஆகியோர் முன்னிலை வகித்து கடமலை- மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள  8 வது வார்டு ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து பேசினார்.  முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் செந்தட்டிக்காளை, காளீஸ்வரன், தர்மர், ஒன்றிய மாணவரணி செயலாளர் அங்குச்சாமி , பாசறை செயலாளர் மலைச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »