சென்னை 25, அக்டோபர் 2026: ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ‘உசுரே’, ‘மயிலாஞ்சியே’, ‘இது தான்’, ‘ஜோ’ படத்தின் ‘உருகி உருகி’, ‘ஆரோ மலே’ படத்தின் ‘எப்படி வந்தாயோ’ என ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பல பாடல் களை கொடுத்தவர் இசையமைப்பாளர் சித்து குமார். காதலை உணர்வுப்பூர்வமாக இசை மூலம் வெளிப் படுத்துவதிலும் இவர் திறமையாளர் என்பதை ‘தீராக் காதல்’ போன்ற படங்களிலும் நிரூபித் துள்ளார்.
தற்போது, யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள ‘ஹைக்கூ’ படத்திற்கு இசை யமைத்துள்ளார். காதல் கலந்த நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இப்படம், இன்று (அக்டோபர் 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் பாடல்கள் ஏற்கெனவே இசை ரசிகர்களிடையே வர வேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தை முன்னோட்டக் காட்சி களில் பார்த்த விமர்சகர் கள் மற்றும் ரசிகர்க ளிடமிருந்தும் பாடல் கள், பின்னணி இசை ஆகியவற்றுக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இதனால் சித்து குமார் மகிழ்ச்சி யடைந்துள்ளார்.
‘ஹைக்கூ’ படத்தின் இசைப் பயணம் குறித்துப் பேசிய இசை யமைப்பாளர் சித்து குமார் பகிர்ந்து கொண்டதாவது, “யுவராஜ் சின்னசாமி ‘ஹைக்கூ’ படத்தின் கதையைச் சொன்ன போதே, அதில் இசைக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதை என்னால் உணர முடிந்தது. அதே நேரத் தில், சில சவால்களும் இருந்தன. காதல் கதைகள் எப்போதுமே இசையமைப்பாளர் களுக்கு ஒரு வரப் பிரசாதம். ஏனெனில், மனதில் நிற்கும் இனிமையான மெலடி களை உருவாக்கு வதற்குப் பல வாய்ப்பு கள் கிடைக்கும். அதே சமயம், கதாபாத்திரங் களின் உணர்வுகளுக்குத் துணையாக இசை இருக்க வேண்டுமே தவிர, அவற்றைத் தாண்டி ஆதிக்கம் செலுத்திவிடக் கூடாது.
‘ஹைக்கூ’ படத் தைப் பொறுத்தவரை, இசை திரைக்கதையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். கிட்டத்தட்ட படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத் தைப் போல மௌன மாக இசை செயல்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இதற்காகப் பல்வேறு இசை வடிவங்களையும், மாற்றங்களையும் முயற்சி செய்து பார்த்தேன். ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு இசைக் குறிப்பும் கதையின் உணர்வுகளுக் கும் அதன் நகர்வுக்கும் உதவ வேண்டும் என்ப தில் உறுதியாக இருந் தோம். இதற்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, படத் துக்குப் பொருத்தமான இசையை உருவாக்கு வதற்கான சுதந்திரத்தை வழங்கிய இயக்குநருக் கும் தயாரிப்பாளர் களுக்கும் நன்றி.
உலகப் புகழ்பெற்ற புடாபெஸ்டில் இப் படத்தின் பின்னணி இசையைப் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய வரப்பிரசாதம். இசைஞானி இளைய ராஜா, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல இசை மேதைகள் தங்களது மகத்தான இசைப் படைப்புகளை உருவாக் கிய இடத்தில் எங்களது படத்தின் பின்னணி இசையையும் பதிவு செய்தது சிறப்பான அனுபவமாக இருந்தது.
படத்தின் முன் னோட்டக் காட்சி களைப் பார்த்தவர் களிடமிருந்து பாடல் களுக்கும் பின்னணி இசைக்கும் கிடைத்து வரும் வரவேற்பு உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் இந்தப் படத்தின் இசை யை உருவாக்கி யிருக்கி றோம். ‘ஹைக்கூ’ படத் தைத் திரையரங்குகளில் பார்க்கும்போது, ரசிகர் களுக்கு அழகான இசை அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
