சென்னை – 15 நவம்பர், 2026 முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று ( 14.11.2026) பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் (சம்விதான் சதன்) மைய மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வின்போது மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவைச் செயலாளர் உத்பல் குமார் சிங், மாநிலங்களவைச் செயலாளர் பி.சி. மோடி ஆகியோரும் பண்டித ஜவஹர்லால் நேருவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பண்டித ஜவஹர்லால் நேருவின் உருவப்படம், அப்போது நாடாளுமன்றக் கட்டடமாக இருந்த தற்போதைய அரசியலமைப்பு மாளிகையின் (சம்விதான் சதன்) மைய மண்டபத்தில், 1966- ம் ஆண்டு மே 5- ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் இந்த உருவப்படத்தைத் திறந்து வைத்தார்.
