hello madras mobile banner 1200x300

பாஸ்பேட், பொட்டாஷ் உரங்கள் மீதான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சென்னை – 12 நவம்பர், 2026 பாஸ்பேட், பொட்டாஷ் உரங்கள் மீதான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு ரபி பருவத்திற்கான (01.10.2026 முதல் 31.03.2027 வரை) மானிய விகிதங்களுக்கு இந்த ஒப்புதல் பொருந்தும். இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.62,370.02 கோடியாகும். இது கடந்த ஆண்டு ரபி பருவத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டைக் காட்டிலும் ரூ.24,417.73 கோடி கூடுதலாகும்.

இதன் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் மானிய விலையிலும், மலிவாகவும் நியாயமான விலையில் கிடைப்பது உறுதி செய்யப்படும். சர்வதேச சந்தையில் உரங்கள், அதற்கான மூலப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகள் கருத்தில் கொண்டு பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களுக்கான மானிய விகிதங்கள் சீரமைக்கப்படும்.

டிஏபி, நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாவர ஊட்டச்சத்துகளுக்கான உர வகைகள் உட்பட பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களுக்கான மானியங்கள் நடப்பு ரபி பருவத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகள் இந்த உரங்களை மலிவு விலையில் தடையின்றி பெறுவது உறுதி செய்யப்படும்.

அரசு உர உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மூலம் டிஏபி உள்ளிட்ட பாஸ்பேட், பொட்டாஷ் உரங்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வழி செய்கிறது. யூரியா, டிஏபி, எம்ஓபி, கந்தகம் போன்ற உரங்கள், வேளாண் இடுபொருள்களுக்கான சர்வதேச சந்தை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டு இதற்கான மானிய விகிதங்களுக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஊட்டச்சத்து அடிப்படையிலான உர வகைகள் விவசாயிகளுக்கு குறித்த காலத்தில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உரங்களுக்கான மானிய விகிதங்கள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த உர மானியங்கள் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரங்கள் கிடைக்க வகை செய்வதுடன் ரபி பருவ பயிர்களுக்காக அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட விகிதாச்சாரங்களின் அடிப்படையில் உரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு இந்த மானியத் தொகை வழங்கப்படும்.

Read the full e-paper

Translate »