சென்னை – 12 நவம்பர், 2026 பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் நவம்பர் 13, 14- ம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார். காலை 10:45 மணியளவில் பிரசாந்தி குதிரத்தின் பொன்விழா கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார். அப்போது அங்கு கூடியிருப்போர்களிடையே அவர் உரையாற்றவுள்ளார். பிற்பகல் 12:45 மணியளவில் தாவரக்கெரேவிலிருந்து பெங்களூரு ஐஐஎம் மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ சேவையை பிரதமர் தொடங்கி வைத்து பயணம் மேற்கொள்கிறார். 1.15 மணியளவில் பெங்களூருவில் ரூ.15,600 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து உரையாற்றுகிறார்.
அதை தொடர்ந்து மைசூரு செல்லும் பிரதமர் மாலை 3:30 மணியளவில் பாரத் வன் பகுதியில் நடைபெறம் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 4:00 மணியளவில் மைசூருவில் உள்ள காஸ்மோஸ் வான்நோக்கி அரங்கை திறந்து வைத்து உரையாற்றுகிறார்.
நவம்பர் 14 அன்று குஜராத்தின் பனஸ்கந்தாவில் உள்ள அம்பாஜி கோவிலில் பிரதமர் தரிசனம் செய்கிறார். அம்பாஜி கோவில் மிகவும் போற்றக்கூடிய 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.
பெங்களூருவில் பிரதமர்:
