hello madras mobile banner 1200x300

நாடு முழுவதும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை – 3 நவம்பர், 2026 ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியதாரர் நலத்துறை, நாடு முழுவதும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தில்லியில் உள்ள மாநாட்டு மையத்தில் 2 நவம்பர் 2026 அன்று நடைபெற்றது.

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில், ஓய்வூதியதாரர்கள், மூத்தகுடிமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்த முகாம், தொழில்நுட்பம் சார்ந்த, எளிதில் பயன்படுத்தக்கூடிய, ஓய்வூதியதாரர்களுக்கு உகந்த சேவைகள் மூலம், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை ' சமர்ப்பிக்க வகை செய்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியதாரர் நலத்துறையின் செயலாளர் நிவேதிதா சுக்லா வர்மா, ஓய்வூதியதாரர்களை டிஜிட்டல் முறையில் வலுப்படுத்துவது, மக்களின் வாழ்க்கைச் சூழலை எளிதாக்குவதில் மத்திய அரசு அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஒரு முக்கிய அங்கமாகும் என்று குறிப்பிட்டார். தொழில்நுட்ப முன்னேற்றங்கள், குறிப்பாக, முக அங்கீகார ' வசதி, ஆயுள் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கும் முறையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம், ஓய்வூதியதாரர்கள் வங்கிகளுக்கோ அல்லது பிற அலுவலகங்களுக்கோ நேரில் செல்ல வேண்டிய அவசியமின்றி, தங்களது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை ' உருவாக்கிக்கொள்ள முடியும்.

Read the full e-paper

Translate »