hello madras mobile banner 1200x300

தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் புகார்களுக்குத் தீர்வு காண்பதற்கான (நான்காவது திருத்த) ஒழுங்குமுறை விதிகளை ட்ராய் வெளியிட்டுள்ளது

சென்னை – 3 நவம்பர், 2026 தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் புகார்களுக்குத் தீர்வு காண்பதற்கான ( நான்காவது திருத்த ) ஒழுங்குமுறை விதிகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( ட்ராய் ), இன்று வெளியிட்டுள்ளது.

புகார்கள் மீது தீர்வு காண்பதற்கான கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்த அதிகரித்து வரும் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்த வரைவு ஆவணத்தை 2026- ம் ஆண்டு மே மாதம் 7- ம் தேதியன்று வெளியிட்டது.

இது குறித்த கருத்துக்கள், ஆட்சேபனைகளை முறையே 2026 ஜூன் 12,19 ஆகிய தேதிகளுக்குள் சமர்ப்பிக்குமாறு ட்ராய் கேட்டுக் கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினர்களிடமிருந்து மொத்தம் 32 கருத்துகளும், 24 ஆட்சேபனைகளும் பெறப்பட்டு, அவை ட்ராய் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 2026 ஜூலை 17 அன்று இணையவழியில் வெளிப்படையான ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது. இந்தத் திருத்தங்கள், வாடிக்கையாளர் புகார் தீர்வு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துகின்றன.

Read the full e-paper

Translate »