சென்னை – 3 நவம்பர், 2026 தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 2025-2026ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.
அதன் அடிப்படையில் ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி || ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணைத் தொகையாக 11.67% என மொத்தம் 20% போனஸ் வழங்கவும், மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணைத் தொகையாக 1.67% என மொத்தம் 10% போனஸ் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்கள்.
இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 5190 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவர். மேலும், மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்க ரூ.351.40 இலட்சம் செலவினம் ஏற்படும்.
