hello madras mobile banner 1200x300

பாரத் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சி மாநாடு, கண்காட்சியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

சென்னை – 3 நவம்பர், 2026 பிரதமர் நரேந்திர மோடி, பாரத் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சி மாநாடு, கண்காட்சியை புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கி வைத்தார். மாநாட்டில் உரையாற்றிய அவர், உலக அளவில், கொவிட் -19 பெருந்தொற்று முதல் தற்போது மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி வரை, முன்னெப்போதும் இல்லாத பல்வேறு தடைகளை எதிர்கொண்டு வருவதை குறிப்பிட்ட பிரதமர், இத்தகைய இக்கட்டான சூழலிலும், இந்தியா பொருளாதார வளர்ச்சியை சீரான முறையில் பராமரித்து வரும் விதம் குறித்து, 140 கோடி மக்களும் பெருமிதம் கொள்வதாக கூறினார்.

உலக அளவில் எரிசக்தி நெருக்கடிகளால் சூழப்பட்ட ஒரு முக்கியமான காலகட்டத்தில் இந்த உச்சி மாநாடு நடைபெறுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சூழல், அன்றாட வாழ்க்கை, நாட்டின் முன்னேற்றத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் ஒன்பதாவது கூட்டமும், பசுமை ஹைட்ரஜன் குறித்த நான்காவது மாநாடும், இந்த மாநாட்டுடன் இணைந்து நடைபெறுவதால், இந்த நிகழ்வு மிகவும் விரிவான பரிமாணத்தைக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Read the full e-paper

Translate »