சென்னை 31, அக்டோபர் 2026: இந்தியா- பெல்ஜி யம்- லக்செம்பெர்க் பொருளாதார ஒன்றி யத்தின் கூட்டு பொரு ளாதார ஆணையத் தின் 19-வது அமர்வு, 2026 அக்டோபர் 29-ம் தேதியன்று, லக்செம்பெர்க்கில் நடைபெற்றது. இதில், மூன்று நாடுகள் இடையேயான வர்த்தகம், முதலீடு, பொருளாதார ஒத் துழைப்பை மேம் படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், இந்திய வர்த் தகத்துறை செயலா ள ர் திரு ராஜேஷ் அகர்வால், பெல்ஜி யம், லக்செம்பெர்க் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
விமானப் போக்கு வரத்து, துறைமுகங்கள், புதுப்பிக்கத்தக்க எரி சக்தி, நவீனத் தொழில் நுட்பம், நிதிச் சேவை, டிஜிட்டல் தொழிநுட் பம், தகவல் மற்றும் தொலைதொடர்பு, சுகாதாரம், உயிரி அறி வியல், ஆயுர் வேதம், பாரம்பரிய மருந்துகள், உணவு, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இந்தியா, பெல்ஜியம், லக்செம்பெர்க் ஆகிய நாடுகள் இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தப் பட்டது. விண்வெளி, ஆராய்ச்சி, புத்தாக்கம், உயர்கல்வி, திறன் மேம்பாடு ஆகிய வற்றில் புதிய வாய்ப்பு களை உருவாக்குவது, வர்த்தகம் தொடர்பான சந்தைகளை மேம் படுத்துவது, பொருளா தாரத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக மூன்று நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித் தும் இந்த அமர்வில் விவாதிக்கப் பட்டது.
மேலும், இந்திய வர்த்தகத்துறை செய லாளர் திரு ராஜேஷ் அகர்வால், லக்செம் பெர்க் நாட்டில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களின் தலை மை செயல் அதிகாரி களுடன் கலந்துரை யாடினார். பொருளா தாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவில் முதலீடு செய்ய அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதற்கான சாத்திய கூறுகளையும் திரு ராஜேஷ் அகர்வால் எடுத்துரைத்தார்.
