hello madras mobile banner 1200x300

ஏர் மார்ஷல் இந்தர்பால் சிங் வாலியா விமானப் படை துணைத் தளபதியாக நியமனம்

சென்னை 31, அக்டோபர் 2026: ஏர் மார்ஷல் இந்தர் பால் சிங் வாலியா, விமானப் படைத் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள் ளார். 01 நவம்பர் 2026 முதல் அவர் இந்தப் பொறுப்பை வகிப்பார். தற்போது, அவர் விமானப் படையின் கிழக்குப் பகுதி தளத்தின் தலை ¬ மத் தளபதியாக உள்ளார். இந்தர்பால் சிங் வாலியா, தேசிய பாதுகாப்பு அகாதமி யின் முன்னாள் மாண வர் ஆவார். இவர் 11 ஜூன் 1988 அன்று இந்திய விமானப்படை யின் போர் விமானப் பிரிவில் அதிகாரியாக நியமிக்கப் பட்டார். இவர் மிக்-21, மிக்-23, மிக்-27, ஜாகுவார், சு-30 எம்கேஐ விமானங் களின் அனைத்து வகை களிலும் தகுதி பெற்றுள் ளார். ஏறக்குறைய 40 ஆண்டுகள் நீடித்த தமது பணிக்காலத்தில், இவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

அவரது சிறந்த சேவையைப் பாராட்டி, அவருக்கு 2008-ல் வாயு சேனா பதக்கமும், 2018-ல் அதி விசிஷ்ட சேவா பதக்கமும் வழங்கப் பட்டன.

Read the full e-paper

Translate »