hello madras mobile banner 1200x300

பதக்கங்களை குவித்த மாற்றுத்திறன் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!

சென்னை 31, அக்டோபர் 2026: ஆசிய பாரா விளை யாட்டில் பதக்கங்கள் வென்று குவித்த தமிழ் நாடு வீரர், வீராங் கனைகள், எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்;

ஜ ப் ப £ னி ல் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 5வது Asian Para Games 2026-ல் இ ந்தியாவுக்காக 3 தங்கம் – 5 வெள்ளி – 7 வெண்கலம் என 15 பதக்கங்களைக் குவித்த நம் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர் – வீராங்கனைகளை இன்று நேரில் பாராட் டினோம். நம்முடைய தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையி லான திராவிட மாடல் ஆட்சியில் Para Athe lets -க்காக செயல்படுத் தப்பட்ட திட்டங்களை நினைகூர்ந்து, நம் வீரர்கள் அன்பையும் – மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

தங்கைகள் கஸ்தூரி ராஜாமணி, பேபி சஹானா ரவி, மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சுமதி சிவன், துளசிமதி முருகேசன், சந்தியா விஸ்வநாதன் – தம்பிகள் மதன், சிவராஜன் சோலைமலை, நவீன் சிவக்குமார், தர்மராஜ் சோலைராஜ், ருத்திக் ரகுபதி, சுதர்சன் முத்து சாமி, சரவணக்குமார், ஹரிஸ் என Asian Para Games -ல் சாதித்த நம் மாற்றுத்திறன் வீரர்கள் இன்னும் பல்வேறு வெற்றிகளைப் பெற வாழ்த்தி மகிழ்ந்தோம்! இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Read the full e-paper

Translate »