hello madras mobile banner 1200x300

குஜராத்தில் ரூ.14,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சென்னை 31, அக்டோபர் 2026: குஜராத்தில் ரூ.14,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங் களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமரின் விவசாயி கள் வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ் ரூ.19,000 கோடியை விடுவித்தார். அகமதா பாத் மெட்ரோவின் 2ம் கட்டத்தின் 'ஏ' மற்றும் 'பி' பகுதி களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அக்டோபர் 30 அன்று காலை 9.30 மணியளவில் பனஸ் கந்தாவிலுள்ள கருமுட்டை பரிமாற்றத் தொழில்நுட்பம் – ஐவிஎஃப் ஆய்வகம், பாரத கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பண்ணையைப் பிரதமர் பார்வையிட்டார் காலை 10.30 மணிக்கு பனஸ்கந்தாவில் ரூ.14,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான ப ல்« வறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி, புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அத்துடன் பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டத்தின் கீழ் 24-வது தவணை யாக ரூ.19,000 கோடியை விடுவித்து, இரண்டு ரயில் சேவை களைத் தொடங்கி வைத்து உரை யாற்றினார்

குஜராத்தின் பனஸ்கந்தாவிலுள்ள பில்தியில் அமைந்துள்ள பாரத கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 127 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இம் மையம் சிறப்பு அதிநவீன மையமாக அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம் கால்நடை இனப்பெருக்கம், மரபணு மேம்பாடு, நவீன இனப்பெருக்க தொழில்நுட்பம் ஆகிய வற்றை வலுப்படுத்தும். இது இனப்பெருக்க முறையை 10 முதல் 20 மடங்கு வரை அதிகரிக்கும். இது கன்க்ரெஜ் இன மாடு களுக்காகப் பிரத்தி யேகமாக அமைக்கப் பட்ட முதல் மைய மாகும்.

தாரத், ரத்தன்பூர் ஆகிய இடங்களில் பனாஸ் பால் பண்ணை நிறுவனத்தின் இரண்டு உயிரி சிஎன்ஜி ஆலை களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இவை நாள் ஒன்றுக்கு முறையே 75 மெட்ரிக் டன், 100 மெட்ரிக் டன் சாணத்தைச் சுத்திகரிக் கும் திறன் கொண் டவையாகும்.

அகமதாபாத் மெட்ரோவின் இரண்டாம் கட்டம் – 2ஏ (விமான நிலைய விரிவாக்கம்), கட்டம் – 2பி (கிஃப்ட் சிட்டி விரிவாக்கம்) ஆகிய வற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இவற்றின் இரண்டாம் கட்டத்தின் 2ஏ பகுதி, கோதேஷ்வர் சாலை முதல் விமான நிலையம் வரை 6 கிலோமீட்டருக் கும் அதிகமான தொலைவில் ஐந்து நிலையங்களைக் கொண்டிருக்கும்.

அதேபோல், 2பி பகுதி கிஃப்ட் சிட்டி முதல் ஷாபூர் வரை 3.3 கிலோமீட்டருக்கும் மேலான தொலைவில் மூன்று நிலையங்கள் இருக்கும்.

Read the full e-paper

Translate »