hello madras mobile banner 1200x300

அரசு பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு!

சென்னை, 31 அக்டோபர் 2026: அரசு பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். வயது உச்ச வரம்பு இன்று முதல் 5 ஆண்டு கள் வரை நடைமுறை யில் இருக்கும் என்று தமிழக அரசு சார்பில் முதல்வர் விஜய் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இளைஞர்களின் நலன்காக்க, போட்டித் தேர்வர்களின் கோரிக் கையை ஏற்று, தமிழ் நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித் துள்ளது. பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர், சீர் மர பினர், ஆதி திரா விடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரி வினருக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள வயது வரம்பு சலுகை யோடு கூடுதலாக அமையக்கூடிய வகை யில் மாற்றி அமைக்கப் பட்டிருக்கிறது.

மாற்றி அமைக்கப் பட்டுள்ள இந்த வயது உச்ச வரம்பு இன்று முதல் அடுத்த 5 ஆண்டு கள் வரை நடைமுறை யில் இருக்கும் என்றும் தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்த புதிய உத்தரவின்படி, குரூப்-1 பணிகளுக்கான அதிக பட்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 வயதாக இருந்த நிலையில் தற்பொழுது 37 ஆகவும், இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கு 37 வயதாக இருந்த நிலையில் தற்பொழுது 42 ஆகவும் உயர்த்தப் பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் (பொதுப் பிரிவு) 42-ல் இருந்து 47 ஆக உயர்வு; மாற்றுத் திறனாளிகள் (ஒதுக் கீட்டுப் பிரிவு) 47-ல் இருந்து 52 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல, குரூப்-2 மற்றும் 2-ஏ பணி களுக்கு பொதுப்பிரி வினருக்கான 30 வயதாக இருந்த நிலை யில் தற்பொழுது 35 ஆக நிர்ணயிக்கப்பட் டுள்ளது; இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு ஏது மில்லை. மேலும், மாற்றுத்திறனாளிகள் (பொதுப் பிரிவு) 40-ல் இருந்து 45 ஆக உயர்வு; மாற்றுத்திறனாளிகள் (ஒதுக்கீட்டுப் பிரிவு) உச்ச வயது வரம்பு ஏதுமில்லை உயர்த்தப் பட்டுள்ளது.

Read the full e-paper

Translate »