hello madras mobile banner 1200x300

எனது ஆதரவால் தோல்வியில் இருந்து இஸ்ரேல் பிரதமர் தப்பினார் – அதிபர் ட்ரம்ப் தம்பட்டம்

சென்னை 29, அக்டோபர் 2026: மேற்காசிய நாடான இஸ்ரேல், 1948ல் நிறுவப்பட்டதில் இருந்து, அங்கு கூட்டணி அரசுகளே அமைந்துள்ளன. கடந்த, 2023ல் ஹமாஸ் பயங்கர வாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல், அதைத் தொடர்ந்து ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனத் தின் காசாவில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல் கள், மேற்காசியாவில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

இஸ்ரேல் பார்லி மென்டுக்கு தேர்தல் நடந்தது. மொத்த முள்ள, 120 இடங் களில், 61 இடங்களைப் பிடிக்கும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சி அமைக்க முடியும்.1 996ல் இருந்து வெவ் வேறு கால கட்டங் களில் மூன்று முறை, 19 ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ள பெஞ்சமின் நெதன்யாகு இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவாரா என்ற பெரும் எதிர் பார்ப்பு இருந்தது.

இதுவரை இல்லாத சாதனை அளவாக, 77 சதவீத ஓட்டுகள் பதிவானது. இவற்றை எண்ணும் பணி, நேற்று இரவே துவங்கியது. இதுவரை, 50 லட்சத் துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் எண்ணப் பட்டுள்ளன.

இ ஸ் « ர லி ல் விகிதாச்சார பிரதி நிதித்துவ முறையில் தேர்தல் நடக்கிறது. கட்சிகள் பெறும் ஓட்டுக்களின் அடிப் படையில், எம்.பி., இடங்கள் ஒதுக்கப் படும். அதன்படி, 61 இடங்களைப் பிடிக்கும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சி அமைக்க முடியும்.

ஆளும் கூட்டணி

தற்போதைய பிரதமர் நெதன்யாகு வின் லிகுட் கட்சித் தலைமையிலான கூட்டணி, 53 இடங் களைப் பெறுகிறது. இதில் லிகுட் கட்சி, 26 இ ட ங் க ளு ட ன் தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

ஐக்கிய தோரா ஜூடாயிசம், ஷாஷ், ஓட்ஸ்மா யேகுடிட் கட்சிகள், தலா ஏழு இடங்களிலும், ஜியோனிஸ்ட் கட்சி, ஆறு இடங்களையும் பெறுகின்றன.

முன்னாள் ராணுவத் தளபதியான காடி ஐசன்கோட்டின் யாஷார் கட்சி தலை மையிலான எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு, 48 இடங்கள் கிடைக் கும். இதில் யாஷார் கட்சி மட்டும் 21 இடங் களை பிடிக்கிறது. முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட் தலைமையிலான பியாக்த் கட்சி, 12, ஜனநாயகக் கட்சி, எட்டு, இஸ்ரேல் பெய்டுனு, ஏழு இடங் களையும் பெறுகின்றன.

அரசுக் கட்சி கூட்டணி

பாலஸ்தீனத்தை தனி நாடாகக் கோரும் அரேபியர்கள், நாட்டின் மக்கள் தொகையில், 20 சதவீதம் உள்ளனர். இரண்டு அரபுக் கட்சிகள், கூட்டணி அமைந்துள்ளன. இந்தக் கூட்டணி, 19 இடங் களைப் பிடித்துள்ளது.

தற்போதைய நிலையில், எந்தக் கூட்டணிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அதிபர் உத்தரவிடலாம். பெரும் பான்மையை நிரூபிக்க அவருக்கு அவகாசம் கொடுக்கப் படும்.

இந்த மூன்று கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியும், மற்றொரு கூட்டணிக்கு ஆதரவளிக்கத் தயாராக இல்லை. அதனால், இஸ்ரேலில் மிக விரைவில் மீண்டும் தேர்தல் நடக்கும் சூழ்நிலை உருவாகும். இஸ்ரேலில், 2019 முதல் 2022 வரையி லான காலகட்டத்தில் மட்டும், கூட்டணி அமையாததால், ஐந்து முறை தேர்தல் நடந் துள்ளது.

Read the full e-paper

Translate »